இத்தாலியில் தேசத்தின் குரலின் 18வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு.

தமிழீழ அரசியல் ஆலோசகர் “தேசத்தின் குரல்” கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18வது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு, 14.12.2024 சனிக்கிழமை 19.30 மணிக்கு, பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்றது. இவ்வணக்க நிகழ்வானது தேசத்தின் குரல் பாலா அண்ணனுக்கான அகவணக்கம், சுடர்வணக்கம், மலர்வணக்கம் என்பன செலுத்தப்பட்டு, அவரின் தமிழீழ விடுதலைக்கான அர்ப்பணிப்புகளை மீள்நினைவுபடுத்தி, உறுதிமொழி எடுக்கப்பட்டு, இந்நிகழ்வு நிறைவுபெற்றது.

உங்கள் கவனத்திற்கு