புதிய ஆணை: Maturità மற்றும் Terza media தேர்வுகள்
கொரோனாவைரசு அவசரகால நிலையைத் தொடர்ந்து பாடசாலைகள் மூடப் பட்டுள்ளன. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொலைதூர கல்வி முறையை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது பாடசாலைகள் சார்ந்து அரசாங்கம் புதிய ஆணை வெளியிட தயார் செய்துள்ளது.
Superiori இறுதியாண்டுத் தேர்வு (Maturità) இணையத்தளம் ஊடாக வாய்வழித் தேர்வாக மட்டும் அமையும். மேலும், பாடசாலைகளுக்குரிய ஆசிரியர் குழு (commissione interna) ஒருங்கிணைக்கப்படும்.
3 media தேர்விற்க்கு, tesina மற்றும் பள்ளி நாட்களில் நடைபெற்ற சோதனைகளின் புள்ளிகள் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும்.
அனைத்து மாணவர்களும் அடுத்த பள்ளியாண்டுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என வெளிவரப்போகிற புதிய ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இனிவரும் நாட்களில் தொலைதூர கல்விமுறை தொடர்ந்து நடாத்தப்பட்டு அதற்குரிய புள்ளிகளும் வழங்கப்பட வேண்டும்.
18 மே மாததிற்குள் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் பட்சத்தில்: maturità தேர்வு முழுமையாக்கப்படும். Terza media மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தால் தேர்வுக்கான சோதனை தீர்மானிக்கப்படும்.
அத்துடன், தனியார் பாடசாலைகளுக்கான தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என அவ் ஆணை விளக்குகிறது.
மேலும், அடுத்த பள்ளி ஆண்டு வகுப்பறையில் அல்லது online பயன்முறை மூலம் செப்டம்பர் தொடக்கத்தில் தொடங்கும். அநேகமாக 1 அல்லது 2 ஆம் திகதி செப்டம்பர் என்று கருதப்படுகிறது.
Pasqua விடுமுறையின் போது வழக்கம் போல விடுமுறை நாட்களாகவே இருக்கவேண்டும் மற்றும் மாணவர்களுக்கான பள்ளி வீட்டு வேலைகள் கொடுக்கப்படலாம் என்று MIUR கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.