ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது
Albiano, Magra ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
Massa Carra மாகாணத்தில், Aulla நகருக்கு அருகிலுள்ள Albiano Magra ஆற்றுப்பாலமும் இடிந்து விழுந்துள்ளது. இன்று (புதன்கிழமை) காலை 10.20 மணிக்கு இது நடந்தது. இதில் இரண்டு பேர் காயமடைந்தனர். எந்தவித உயிரிழப்புகள் இடம்பெறவில்லை. இந்த கொரோனாவைரசு அவசர நிலை காரணமாக வாகனம் மற்றும் கனரக வாகன ஓட்டுநர்களின் பயணம் குறைவாக இருந்ததனால் பெரிய உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
TIM நிறுவனத்தின் வாகன ஓட்டுநர் மற்றும் Bartolini விரைவு அஞ்சல் சேவையின் ஓட்டுநர் இருவரும் விபத்துக்குள்ளாகியுள்ளனர். இடிந்து விழுந்தபோது பாலத்தைக் கடந்த இரண்டு வாகனங்களில் ஒன்றின் ஓட்டுநர் அதிஷ்ட வசமாக எந்தவித காயங்களும் இல்லாமல் உயிர்தப்பினார். மேலும், மற்ற வாகன ஓட்டுநர் சில எலும்பு முறிவுகளுக்கு உள்ளாகியுள்ளார். இருவரும் பொது மக்களால் மீட்கப்பட்டு Pisa மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Cisa மாநில சாலையை Albiano மாகாண சாலையுடன் இணைக்கிற இந்த பாலம் மடிந்த காகித அட்டை போல் காட்சியளிக்கிறது. மற்றும் கடந்த மாதங்களில் இந்த பாலத்தில் ஏராளமான விரிசல்கள் இருப்பதாக பல வாகன ஓட்டிகளிடமிருந்து தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் வந்திருந்தது. மேலும், நவம்பரில், மோசமான வானிலை காரணமாக பெரிய விரிசலும் ஏற்பட்டது. Anas நிறுவன பொறியியல் வல்லுநர்கள் மற்றும் Aulla நகர துணைஆளுநர் Roberto Cipriani தலையிட்டிருந்த போதும் பாலத்தின் கட்டமைப்பில் எந்தவொரு ஆபத்தும் இல்லை என உறுதியளித்திருந்தனர்.
தற்போது மூன்று தீயணைய்ப்புப் படை குழுவினர் அவ்விடத்தில் செயல்பட்டு வருகின்றனர்.
«Albianoவில் ஒரு பாலம் இடிந்து விழுந்ததில் நாம் உடனடியாக நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டிய ஒரு மிக முக்கியமான விடயம். ஆபத்தான மற்றும் சரிந்து வரும் பொதுப்பணிகளால் நாங்கள் சோர்ந்து போகிறோம். நீதித்துறை மதிப்பீடுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். மேலும், பொதுப்பணி எவ்வாறு செய்யப்படுகிறது என்ற தலைப்பில் ஒரு அரசியல் பார்வை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது. ஒரு பாலம் இடிந்து விழுவதைப் பார்ப்பது ஒரு சமூகத்திற்கு ஒரு பெரியளவு சோகம், பயத்தை அளிக்கிறது» என்று Italia Viva மற்றும் நீதித்துறை ஆணையத்தின் உறுப்பினருமான Cosimo Ferri அவர் கருத்தை தெரிவித்துள்ளார்.