சென் நதி நீரில் வைரசின் தடயங்கள். Paris இல் வீதிகள் சுத்தம் செய்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது


சென் நதியில் இருந்து மீட்கப் பட்ட நீரில் கொரோனாவைரசின் தடயம் கண்டுபிக்கப்பட்டுள்ளது. ஆனால், வீட்டில் விநியோகப்படும் தண்ணீரில் எந்தவித பாதிப்புகளும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவைரசு கழிவு நீரில் இருக்கக் கூடும் என்பது பல நாடுகளில் அறிந்த தகவல். Australia, Holland மற்றும் USA வின் சில மாநிலங்களில் கழிவுநீரை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறார்கள். அந்த நீரை சோதனை செய்வது மூலம் வைரசின் பரவுதலை கண்காணிக்க முடியும்.

அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பும், வைரசு மலத்திலும் காண முடியும். இதனால் அறிகுறிகள் காணுவதற்கு முன்பே ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பு பகுதியில் தொற்றுதல் ஏற்பட்டு இருப்பதை கழிவுநீர் பரிசோதனைகள் ஊடாக கண்டுபிடிக்க முடியும். ஆனால் கழிவுநீரில் காணப்படுகிற வைரசு தொற்று சக்தியுள்ளதா என்பதை இன்னும் உறுதிப் படுத்தவில்லை.

வீடுகளில் விநியோகிக்கப்படும் தண்ணீரில் தொற்றுதல் பரவுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஒருபுறம், விநியோகிக்கப் படும் நீர் வைரசு மற்றும் கிருமிகளை நீக்கும் செயல்முறைகளுக்கு உள்ளாக்கப்படுகிறது. மறுபுறம், வைரசு இருந்தாலும் அதன் தொற்றுதல் ஏற்படுத்தும் அளவு மிக சிறியதாக தான் இருக்கக்கூடும்.

இத்தாலி சுகாதார அமைச்சகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள நோய் கண்காணிக்கும் மையங்களும் வீடுகளில் விநியோகிக்கப்படும் தண்ணீர் எந்த வித பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்துள்ளார்கள்.

Paris பொறுத்தவரையில், கழிவுநீரில் வைரசு இருப்பது ஒரு பிரச்சினையாக இருக்கிறது. சுத்தப்படுத்தாத சென் நதி நீரை வீதிகள் சுத்தம் செய்வதற்கும், பூங்காக்களுக்கும் மற்றும் தோட்டங்களுக்கு பயன்படுத்தி வருகிறது. இதனால் வீதிகளை சுத்தப்படுத்துவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் “வைரசு சிறிய அளவில் தான் இந்த நீர்களில் கண்டுபிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டு நீரில் எந்த பாதிப்பும் வராது” என்று Paris நகரசபை தலைவி Anne Hidalgo உறுதியளித்தார்.

உங்கள் கவனத்திற்கு