Ryanair: “விமானங்களில் பாதுகாப்பு இடைவெளிகளை கடைபிடிப்பது இயலாது”
கொரோனாவைரசு அவசநிலையைத் தொடர்ந்து பல நாடுகளில் விமானப் போக்குவரத்துக்களில் பயணிகளுக்கிடையே பாதுகாப்பு இடைவெளிகளை மேற்கொள்ளவேண்டும் என்ற இறுக்கமான விதிமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், Ryanair விமான நிறுவனத்தின் தலைவர் Michael O’Leary இப்படியான விதிமுறைகளை எதிர்த்துள்ளார். விமானங்களில் நடுவரிசை இருக்கைகளை வெறுமையாக வைத்திருக்க வேண்டுமானால் தங்கள் விமான சேவையை தொடரப்போவதில்லை என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 66% நிரப்பு வீதத்துடன் பணம் சம்பாதிப்பது சாத்தியமில்லை என்று Financial Times ன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும், இப்படியான விதிமுறையால் சமூக இடைவெளியை முழுமையாக்க இயலாது. எனவே, இவை தேவையில்லாத மற்றும் பயனற்ற முட்டாள்தனமான விதிமுறைகள் என்று அவரது மறுப்பைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசின் பரவுதலால் விமான போக்குவரத்து நிறுவனங்கள் பெரும் தாக்கத்தை எதிர்கொண்டுள்ளனர். கீழே இணைக்கப்பட்ட படத்தில் ஐரோப்பாவில் வீமனாப் போக்குவரத்து எவ்வாறாக குறைந்துள்ளது என்பதை கடந்த வருடத்தின் தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்க முடியும்.