உறவினர்களை சந்திப்பதற்கு புதிய சுயஅறிவிப்புப் படிவத்தின் விதிமுறைகள்
கட்டம் 2 மே 4 இலிருந்து ஆரம்பமாகும் என அரசாங்கம் தெரிவித்திருந்ததின் படி அதற்குரிய ஆணையையும் வெளியிட்டிருந்தது. அவ் ஆணையின் கீழ் மே 4 இருந்து இன்னுமொரு புதிய சுயஅறிவிப்புப் படிவம் அமுல்படுத்தப்படாது என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இறுதி முடிவுகள் இன்னும் சில மணிநேரங்களில் எடுக்கப்படவுள்ளன. ஆனால், தற்போது நடைமுறையில் இருக்கின்ற படிவத்தை பயன்டுத்துவது சிறந்தது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும்,தனிப்பட்ட உரிமைகளை கருத்தில் கொண்டு சந்திக்கச் செல்லும் உறவினர்களின் விபரங்களை குறிப்பிடுவது அவசியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
புதிய விதிமுறைகள் கீழ்வருமாறு:
- நகர்வு மேற்கொள்ளும் நபரின் விபரம் அனைத்து இடங்களிலும் நிரப்பப்பட வேண்டும்.
- நகர்வு தொடங்கிய முகவரி மற்றும் சென்றடையும் இடத்தையும் குறிப்பிட வேண்டும்
- “நகர்வின் அவசிய நிலைமை” அனைத்து இடங்களையும் நிரப்ப வேண்டும்
- உறவினரை சந்திக்கச் செல்லும் பட்சத்தில் : “இது சம்பந்தமாக அறிவிக்கிறேன் …(a questo riguardo dichiara che…)” என்ற இடைவெளியில் ஒரு “உறவினரை ” சந்திக்கச் செல்வதாக குறிப்பிட வேண்டும். இதில் உறவுமுறையை மட்டுமே உள்ளிடுவது போதுமானது, அவரின் விபரங்களை தவிர்த்துக்கொள்ளலாம்.
மேலும், சனிக்கிழமைக்குள், எந்த வகையான உறவினர்கள் “உறவினர்கள்” என்ற வரையறையில் சேர்க்கப்படுகிறார்கள் என்று அரசாங்க இணையதளத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கத்தில் அறிவிக்கப்படும்.