Milano, Navigli யில் நிறைந்த மக்கள் கூட்டம்: கோபமடைந்த ஆளுநர்
“முகக்கவசம் இல்லாமல் நான்கு பேர், ஒருவருக்கொருவர் அருகில் உட்கார்ந்து, எல்லாவற்றையும் பலனற்றதாக மாற்றுவதை நான் அனுமதிக்க மாட்டேன். Navigli ஐ மூடுவதற்கும், கொண்டு செல்லப்படும் உணவுச் சேவையை தடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன் ” என்று Milano மாநகர ஆளுநர் Sala தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்று Navigli யில் bar மற்றும் உணவகங்களுக்கு முன்னால் கூட்டமாக இருந்த மக்களின் புகைப்படங்களும் காணொளிகளும் வலைதளத்தில் பலரின் எதிர்ப்பைத் தூண்டிவிட்டன. மேலும் Milano நகரின் ஆளுநர் Beppe Salaவை கடும் கோபமடைய வைத்துள்ளன.
இன்று வெள்ளிக்கிழமை Sala தனது வழக்கமான காணொளி செய்தியில் Milano நகரத்திற்கு ஒரு இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார் : «எனது அரசியல் செய்கையில் உள்ளது. என்னுடையது ஒரு இறுதி முடிவு அல்ல, ஆனால் ஒரு இறுதி எச்சரிக்கை. இன்று அனைத்தும் மாற்றமடைய வேண்டும் அல்லது நாளை நடவடிக்கைகள் எடுப்பேன்: நான் Navigliயை மூடுவேன் அல்லது அதற்கு பதிலாக கொண்டு செல்லும் உணவுச் சேவையை இடைநிறுத்துவேன். பின்னர் நீங்கள் எதற்காக ஆளுநர் பானங்களை விற்க அனுமதிக்க வில்லை என்று bar கடைக்காரர்களுக்கு விளக்கமளியுங்கள்” என்று மக்களை நோக்கி கூறியுள்ளார்.
மேலும், நேற்றைய காணொளிகள் புகைப்படங்கள் யாவும் வெட்கக்கேடானவை. «நாங்கள் சுகாதார நெருக்கடியில் இருப்பது மட்டுமல்லாமல், தொற்றுநோய் நம் நகரத்தை எவ்வளவு பாதித்துள்ளது என்பதைக் கண்டோம், நாங்கள் ஆழ்ந்த பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியில் இருக்கிறோம். Milano மீள வேண்டும்». «மீண்டும் திறப்பது ஒரு பழக்கம் அல்ல, ஆனால் அது ஒரு தேவை. மாத இறுதியை அடைய கடினப்படும் குடும்பங்களின் சார்பாக நான் இருக்கிறேன், நான் வேலைக்குச் செல்வோரின் பக்கம் இருக்கிறேன், வேடிக்கையாக திரியும் மக்களின் பக்கமல்ல » என்றும் தெரிவித்துள்ளார்.
Milano நகராட்சி இன்று உள்ளூர் காவல்துறையினருடன் Naviglio மீதான சோதனைகளை வலுப்படுத்தும். «நான் மீண்டும் சொல்கிறேன், ஒரு மில்லியன் மற்றும் 4 லட்சம் மக்கள் கொண்ட ஒரு நகரத்தில் இது ஒரு விளையாட்டு அல்ல. நாம் அனைவரும் எங்கள் அறிவைப் பயன்படுத்துகிறோம், அறிவற்றவர்கள் 1% சதவிகிதம் மட்டுமே உள்ளனர், மீதமுள்ள 99% சதவிகித மக்களை ஆபத்துக்குள் தள்ள அந்த 1% சதவிகிதத்தை நான் அனுமதிக்க மாட்டேன் ” என்று கூறியுள்ளார்.