“இத்தாலி மறுவாழ்வு” (Cura Italia) எனும் சிறப்பு ஆணையின் முக்கிய அம்சங்கள்.
இவ் 25 பில்லியன் திட்டத்துடன் 350 பில்லியனுக்குரிய பணப்புழக்கங்கள் ஏற்படுத்தப்படும். இத் திட்டம் ஒரு முதல் கட்ட நடவடிக்கை என்று இத்தாலி பிரதமர் Giuseppe Conte கூறுகின்றார். இவ் ஆணையுடன் (Decreto) மட்டும் அனைவருக்கும் உதவ முடியாது, ஆகையால் எதிர்வரும் மாதங்களில் பல அரச திட்டங்கள் மற்றும் புதிய ஆணைகள் அமுல்படுத்தப்பட உள்ளன.
இந்த ஆணையின் சில முக்கிய அம்சங்கள். (இத்தாலி மொழியில் முழு ஆணை)
சுகாதாரம், குடும்பங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான உதவிகள்.
புதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பணியமர்த்தல், சுற்றுலாத்துறைக்கான குறிப்பிட்ட நடவடிக்கைகள் மற்றும் முகமூடிகளின் இத்தாலிய உற்பத்திக்கான உந்துதல். கொரோனாவைரசை எதிர்க்கொள்வதற்கும் பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்குமான ஆணை இறுதியாக அமைச்சர்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது: இது 25 பில்லியன் யூரோக்கள் பெருமதியான நடவடிக்கைகளையும் குடும்பங்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களுக்கான உதவிகளையும் முன்வைக்கிறது. இவ் ஆணை அவசர கால பொருளாதார மாற்றங்களின் வரையறைகளை தீர்மானித்துள்ளது: குறிப்பாக, 1,15 பில்லியன் யூரோக்களை நிலையான தேசிய சுகாதாரத் தேவைகளுக்கு நிதியளிப்பதற்கும், 1,5 பில்லியன் யூரோக்களை சிவில் பாதுகாப்புத்துறையில் நிறுவப்பட்ட தேசிய அவசர நிதிக்கும் இவ் ஆணையானது ஒதுக்குகின்றது. “யாரும் தனியாக விடப்பட மாட்டார்கள்”, என பொருளாதார அமைச்சர் Roberto Gualtieri உறுதியளிக்கின்றார்: “எமது நாட்டைப் பாதுகாப்பதற்கும் ஆதரிப்பதற்கும் தேவையான அனைத்தையும் செய்வோம்”. “மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் பாதுகாப்பாக பணியாற்றுவதற்காக” அவர்களுக்கு பிரதம அமைச்சர் முதலிடம் கொடுக்கின்றார்.
புதிய நடவடிக்கைகளில் அடங்குவது: கொரோனாவைரசின் அவசர கால நிலையால் பள்ளிக்கு அனுப்ப முடியாமல் வீட்டில் சிறு குழந்தைகளை வைத்திருக்கும் தொழிலாளர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் ஊழியர்களுக்கும் 50% சம்பளத்திற்குச் சமமாக சிறப்பு விடுப்பு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு வேலை செய்பவர்களுக்கு வவுச்சர்கள் (voucher); அனைத்து துறைகளுக்கும் பணிநீக்க நிதியின் நீட்டிப்பு; மார்ச் 16 ஆம் திகதியின் வரிகள் அனைத்தின் கொடுப்பனவுகளையும் குறைந்தது ஒரு வாரத்திற்கு நிறுத்தம்; வரி கொடுப்பனவுகள் (IVA), சம்பள நிறுத்திவைப்புகள் மற்றும் வரிகளின் நீண்ட நீட்டிப்பு.
அனைத்து தொழிலாளர்களுக்கும் பணிநீக்க நிதி – Cassa integrazione (9 வாரங்கள் வரை)
அடிப்படையில் வேலை நிறுத்தம் செய்யப்படும் ஒரு நிறுவனத்தில் பணி புரிபவர்களுக்கு அரசு செலுத்தும் சம்பளத்தின் ஒரு பகுதியான பணிநீக்க நிதி (Cassa integrazione) எல்லோருக்கும் நீடிக்கப்பட்டுள்ளது, மேலும் ஐந்துக்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களாலும் இது பயன்படுத்தப்படலாம். Gualtieri விளக்குவது போல், “கொரோனாவைரசு காரணமாக யாரும் வேலையை இழக்கக்கூடாது, யாரும் பணிநீக்கம் செய்யப்படக்கூடாது” என்பது தான் இதன் குறிக்கோளாகும்.
அத்துடன் பணிநீக்க நிதிகளுக்கு (Cassa integrazione) உட்படாத விவசாய மற்றும் பருவகால தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள், மேலும் கால வரையறைக்கு அடங்கிய வேலை ஒப்பந்தம் உள்ளவர்களுக்கும் உத்தரவாதம் அளிக்கப்படும். பணிநீக்க நிதியானது அனைவருக்கும் 9 வாரங்கள் வரை நீடிக்கப்படும்.
சமூகப் பாதுகாப்பு வலைகளுக்கு கிட்டத்தட்ட 5 பில்லியன் யூரோக்கள் வருகை: சாதாரண பணிநீக்க நிதிக்கும், சிறப்பு பணிநீக்க நிதியை சாதாரண பணிநீக்க நிதியாக மாற்றுவதற்கும் (338 மில்லியன்) சுமார் 1,3 பில்லியன் யூரோக்கள் எதிர்ப்பார்க்கப்படுகிறது. மீதியுள்ள 3,3 பில்லியன் யூரோக்கள் விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளுக்கு பயன்படுத்தப்படும். வீட்டு வேலைகள் இவற்றில் அடங்காது.
சுயதொழில் செய்பவர்களுக்கும் (autonomi) வீட்டுக்கான வங்கிக் கடன்களின் நிறுத்தம் (ISEE தேவையில்லை)
ISEE வழங்காமல், சுயதொழில் செய்பவர்களுக்கும் (autonomi) முதலாவது வீட்டிற்கான மாதாந்த வங்கிக்கடன் செலுத்துவது நிறுத்தப்படுகின்றது.
வேலை இழப்பு, மரணம் அல்லது தனிமையில் செயல்பட முடியாதது போன்ற காரணங்களால் சிரமத்தில் உள்ள குடும்பங்களுக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள Gasparrini நிதியத்தின் இணைப்புக்களை, அவசர கால நிலைமையால் வருமானத்தில் 1/3க்குச் சமமான குறைப்பை எதிர்கொள்கின்ற சுயதொழிலாளர்களுக்கும் இவ் ஆணையானது விரிவுப்படுத்துகின்றது.
500 மில்லியன் யூரோக்கள் உத்தரவாத நிதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விடயங்களுக்கு இத்தாலி மொழியில் உள்ள ஆணையை படிக்கவும் மற்றும் நிபுணர்களை தொடர்பு கொள்ளவும்.
தனிமைப்படுத்தப்பட்ட காலமும் (quarantena) நோய்க் காலமும் சமம்
தனியார் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, கோவிட் -19 காரணமாக, 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட காலமும் (Quarantena) அல்லது வலுவான கண்காணிப்புடன் வீட்டில் தங்கியிருந்த காலமும், குறித்த சட்டத்தால் வழங்கப்பட்ட பொருளாதார நோக்கங்களுக்காக, நோய்க் காலத்துடன் சமப்படுத்தப்படுகின்றது. இந்த காலப்பகுதியை தொழிலாளரை வேலைநீக்கம் செய்வதற்கு கணக்கிட முடியாது. மருத்துவரால் வழங்கப்பட வேண்டிய மருத்துவ அறிக்கையின் (Certificati) விதிமுறைகள் இவ் ஆணை மூலம் நிறுவப்பட்டுள்ளன.
IVA வரி பதிவு உள்ளவர்களுக்கு (Partita IVA) மற்றும் சுயதொழில் (autonomi): 600 யூரோக்கள் பெருமதியான இழப்பீடு
23 பெப்ரவரி 2020 அன்றிலிருந்து செயற்படும் IVA வரி பதிவு உள்ள சுயதொழிலாளர்களுக்கும், அதே திகதியிலிருந்து Co.Co.Co.(Contratto di collaborazione coordinata e continuativa) ஒப்பந்தங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் , 600 யூரோக்கள் பெருமதியான இழப்பீடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அதே கொடுப்பனவு விளையாட்டுக் கழகங்கள் மற்றும் சங்கங்களுக்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ் இழப்பீட்டுத் தொகை INPS மூலம் செலுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வேலை நிறுத்தங்கள் நிகழாமல் இருப்பதற்கு 10 பில்லியன் யூரோக்களுக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அமைச்சர் Gualtieri கூறினார் – நாங்கள் அனைத்து வகையான ஊழியர்களுக்கும் சமூக பாதுகாப்பு வலைகளை விரிவுப்படுத்தியுள்ளோம், மேலும் சுயதொழில் செய்யும் அனைவருக்கும் மார்ச் மாதத்திற்கான 600 யூரோக்களை வழங்குகின்றோம்.
வரித் திட்டம்: மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மே 31 வரை வரி, மற்றும் Iva நிறுத்தம்
கொரோனா வைரசுவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் (விளையாட்டுடன் தொடர்புடயவை, gymகள் போன்று, கலை மற்றும் கலாச்சாரம் தொடர்புடயவை, தியேட்டர்கள் மற்றும் சினிமாக்கள், போக்குவரத்து, உணவகங்கள், கல்வி மற்றும் உதவி உள்ளிட்டவை) மே 31 வரை வரிகள் செலுத்துதல் (versamenti di ritenute, contributi assicurativi) மற்றும் மார்ச் மாதம் கட்ட வேண்டிய Iva, ஆகியவற்றின் இடைநீக்கத்தைப் பயன்படுத்த முடியும். வசூல் மீண்டும் தொடங்கப்பட்டவுடன், இடைநிறுத்தப்பட்ட கொடுப்பனவுகள் அபராதம் மற்றும் வட்டி இல்லாமல், ஒரே தீர்வில் அல்லது மே 5 முதல் அதிகபட்சம் 5 மாத தவணைகளுடன் செய்யப்படும்.
Partita Iva: மே மாதத்தில் வரி செலுத்துதல், ஜூன் மாதத்தில் நிறைவேற்றுதல்
வரி மீண்டும் வசூலிக்கும் பொழுது, கொரோனா வைரசு அவசரத்திற்கான வரி இடைநீத்தால் பயனடைந்த Partita Iva க்கள் அபராதம் மற்றும் வட்டி இல்லாமல், ஒரே தீர்வில் 2020 மே 31 க்குள் அல்லது தவணை முறையில் மே 2020 முதல் அதிகபட்சம் 5 மாதத் தவணைகளில் செலுத்தப்படும். இடைநீக்கம் செய்யப்பட்ட “கடமைகள்” (adempimenti) 30 ஜூன் 2020 க்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சிறு – நடுத்தர வணிகங்கள் ஆதரவுக்காக கிட்டத்தட்ட 3 பில்லியன் ஒதுக்கீடு:
அரசாங்கம் வழங்குகின்ற நிதி உதவி நடவடிக்கைகளை சிறு – நடுத்தர வணிகங்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட கடன்களில் 33% வரை, பயன்படுத்திக் கொள்ள முடியும்.
சிறு – நடுத்தர வங்கிகளுக்கான மத்திய உத்தரவாத நிதி:
இந்த சட்டத்திலிருந்து 9 மாதங்களுக்கு, 5 மில்லியன் யூரோக்கள் வரையிலான கடன்களுக்கு அரசாங்கம் ஒரு உத்தரவாதத்தை வழங்குகிறது, இது முதலீடுகள் மற்றும் கடன் சூழ்நிலைகளை மறுசீரமைப்பதை நோக்கமாகக் கொண்டது.
வணிகங்களின் பணப்புழக்கத்திற்கான ஆதரவு:
மேற்கூறிய அவசரநிலை காரணமாக வருவாய் குறைப்பை சந்தித்த நிறுவனங்களுக்கு ஆதரவாக, Cassa depositi e prestiti S.p.a. க்கு பணப்புழக்கத்தை வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, வங்கிகள் மற்றும் கடன் வழங்க அங்கீகரிக்கப்பட்ட பிற நிறுவனங்கள் மூலமாகவும்.
மேலதிக விபரங்களுக்கு இத்தாலி மொழியில் உள்ள சட்ட ஆணையினை வாசிக்கவும் அல்லது ஒரு வணிக ஆலோசகரை நாடவும்.
ஊழியர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு வருமான ஆதரவு
கொரோனா வைரசுவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஒரு ‘வருமான நிதி’ வருகிறது. இந்த நடவடிக்கை செயற்பாட்டை நிறுத்தி, குறைத்து அல்லது இடைநிறுத்திய மற்றும் 2019 ஆம் ஆண்டில் 10 ஆயிரம் யூரோக்களுக்கு மேல் சம்பாதிக்காத ஊழியர்கள் மற்றும் சுயதொழில் புரியும் தொழிலாளர்களுக்கு வருமான ஆதரவை வழங்குகிறது.
அவர்களுக்கு ஆதரவாக, 2020 ஆம் ஆண்டில் கொடுப்பனவு செலுத்த 200 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில் அமைச்சகம் அளவுகோல்களை வரையறுக்கும்.
சம்பளத்தின் 50% க்கு 15 நாட்கள் கூடுதல் பெற்றோர் விடுப்பு
பள்ளி மூடப்பட்டதால் வீட்டிற்கு அனுப்பப்பட்ட 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெற்றோருக்கு விடுப்புகள் வழங்கப்படுகின்றன. இச் “சிறப்பு” விடுப்பு அனைத்து ஊழியர்களுக்கும் மார்ச் 5 முதல் செல்லுபடியாகும். ஒரே நேரத்தில் அல்லாமல், தாய் தந்தை இருவருக்கும் அதிகபட்சமாக 15 நாட்கள் கொடுப்பனவு வழங்கப்படும், மேலும் இது சம்பளத்தின் 50% க்கு சமமாக இருக்கும். ஊனமுற்ற குழந்தைகளுக்கு வயது வரம்பு இல்லை. 12 முதல் 16 வயதுக்குற்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் இல்லாத விடுப்பு வழங்கப்படும்.
தனியார் துறையில் பணிபுரியும் பெற்றோர்களுக்கும், தனி நிர்வாகத்தின் கீழ் பிரத்தியேகமாக பதிவுசெய்யப்பட்டு பணிபுரியும் பெற்றோர்களுக்கும், Inps இல் பதிவுசெய்யப்பட்ட சுயதொழில் பெற்றோர்களுக்கும் இந்த கொடுப்பனவு செல்லுபடியாகும்.
மேலும், 12 முதல் 16 வயதிற்குற்பட்ட குழந்தைகளுடன் தனியார் துறையில் பணிபுரியும் பெற்றோர்கள், கொடுப்பனவு பெறாமல், பள்ளி மூடியிருக்கும் காலத்திற்கு வேலைக்குச் செல்லாமல் இருக்கலாம். தவிர்ப்பதற்கான உரிமை உண்டு. அவர்களை பணிநீக்கம் செய்ய முடியாது மற்றும் வேலையைத் தக்கவைக்கும் உரிமையும் உண்டு.
குழந்தை பராமரிப்பிற்க்கு (baby sitter) 600 யூரோ வவுச்சர் (விசேட பெற்றோர் விடுமுறை இல்லாமல்):
விசேட பெற்றோர் விடுமுறைக்கு (congedo parentale) மாற்றாக, 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் குழந்தைப் பராமரிப்பு வவுச்சர்களைக் கோரலாம்.
குழந்தை பராமரிப்பாளர்-க்கான போனஸ் (bonus baby sitter) “அதிகபட்சமாக 600 யூரோக்கள் என்ற வரம்பில் வழங்கப்படுகிறது மற்றும் குடும்ப கையேட்டின் (libretto famiglia) மூலம் இது செலுத்தப்படும்”.
இந்த போனஸ் ஆகியது, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வைத்திருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மற்றும் சுகாதார சேவையாளர்கள், மருத்துவ ஆய்வக வல்லுநர்கள் ஆகியோருக்கு 1,000 யூரோக்கள் வழங்கப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வீட்டுத் தொழிலாளர்கள் (colf) மற்றும் முதியோர்-பராமரிப்பாளர் (badante). பிப்ரவரி 23 முதல் மே 31 வரை திட்டமிடப்பட்ட வீட்டுத் தொழிலாளர்கள் மற்றும் முதியோர் பராமரிப்பாளர்களுக்கான பங்களிப்பு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறது – அபராதம் மற்றும் வட்டி இல்லாமல்.
முகமூடி உற்பத்திக்கு உந்துதல்
கொரோனா வைரசின் அவசரநிலையால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் குடும்பங்களுக்கான ஆதரவிற்கான இந்த பாரிய சட்ட ஆணையில் இடம்பெற்றதாக : << முதலீட்டு ஈர்ப்பு மற்றும் வணிக மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் எனும் Invitalia , திருப்பிச் செலுத்த முடியாத கடன்கள் அல்லது நிர்வாகக் கணக்கில் பங்களிப்பு, மானியக் கடன்கள் ஊடாக கோவிட் -19 அவசர காலங்களில் தனிப்பட்ட மற்றும் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கி அதன் போதுமான விநியோகத்தை உறுதிப்படுத்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
«CE» வகைக்குறி அற்ற முகமூடிகளுக்கும் அனுமதி.
தற்போதைய விதிமுறைகளை மீறிய அறுவை சிகிச்சை முகமூடிகளை தயாரிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இத்தகைய முகமூடிகளை உற்பத்திசெய்ய விரும்பும் உற்பத்தி நிறுவனங்கள், அனைத்து பாதுகாப்புத் தேவைகளையும் மதித்து, முகமூடிகளின் தொழில்நுட்ப பண்புகள் குறித்து உயர் சுகாதாரண நிறுவனத்திற்கு(I.S.S) சுய சான்றிதழை அனுப்ப வேண்டும்.
ஐ.எஸ்.எஸ் இனால் தற்போதைய விதிமுறைகளுடன் 2 நாட்களில் இவ் முகமூடிகளின் இணக்கம் குறித்து அறிவிகப்படும்.
மேலும் அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு திருப்பிச் செலுத்த முடியாத நிதிச் சலுகைகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், அமைச்சர்கள் பேரவையின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட அவசரகால நிலை முடிவடையும் காலம் 31 ஜனவரி 2020 வரை, ஒரு தனிப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைக்காக CE வகைக்குறி இல்லாத முகமூடிகளின் பயன்பாடு நாடு முழுவதும் அனுமதிக்கப்படும்.
மார்ச் மாதம், பணியிடத்தில் வேலை செய்பவர்களுக்கு 100 யூரோக்கள் சன்மானம் வழங்கப்படும்.
ஆண்டுக்கு 40 ஆயிரம் யூரோக்களுக்குக் குறைவான வருமானம் கொண்ட மற்றும் வரிவிலக்கு இல்லாத அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு மார்ச் மாதம் 2020 இல் 100 யூரோக்கள் சன்மானம் வழங்கப்படும். இது பணியிடத்தில் தொடர்ந்து பணியாற்றி வரும் பொது மற்றும் தனியார் ஊழியர்களுக்குச் செல்லும்.
இது பணியிடத்த்தில் வேலை செய்த நாட்களுடன் ஒப்பிடப்படுகிறது மற்றும் ஏப்ரல் மாத சம்பள காசோலையில் அல்லது ஆண்டு முடிவில் கோங்குவாலியோவில் (conguaglio) அல்லது முடிந்தால் முதலாளியால் தானாக வழங்கப்படும்.
கடைகள் மற்றும் ஏனைய விற்ப்பனைக்கூடங்கள்:
வாடகை மீதான 60% கடன் வரி சலுகை கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளிலிருந்து வரும் எதிர்மறையான விளைவுகளை மட்டுப்படுத்தும் பொருட்டு, வணிகர்களுக்கும் மற்றும் கடைக்காரர்களுக்கான மார்ச் மாத வாடகைக் கட்டணத்தில் 60% வரிக் கடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க சலுகைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன .
அமைச்சரவையின் 11 மார்ச் வெளியிட்ட சட்டத்தின் பின்பு குடியுரிமை வருமானம் (Reddito di Cittadinanza) Naspi மற்றும் Discoll போன்ற அரச சலுகை திட்டங்கள் ஊதிய மானியங்களும் வழங்குவதை கடினமாக இருக்கும் பட்சத்தில் அதை தற்காலிகமாக இடைநிறுத்த செய்யப்பட்டுள்ளது.
அவசரகால நிறைவுபெற்ற பின்பு இந்த அரச திட்டங்களை நிறுத்தப்பட்ட நாளிலிருந்து மீண்டும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என்பதை இச்சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதே காரணமாக கட்டாய பணியமர்த்தல்களும், பொது மற்றும் அரச நிறுவனங்களால் நடத்த பட்ட தேர்வுகள், வேலைவாய்ப்பு மையங்களின் சந்திப்புக்கள் கூட்டங்கள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
விடுதிகள் (Alberghi) மற்றும் தனிநபர் மனைகளை கோரிப்பெறுவதற்கான அதிகாரங்கள் வழங்குதல்.
மாகாண நிர்வாக அலுவருக்கு (Prefetto) தனிமைப்படுத்தப்பட்ட நிபந்தனைக்கு (Quarantena) உள்ளாகிய நபர்களை இடமளிப்பதற்கு தங்கும் விடுதிகள் (Alberghi) கோரிப்பெறுவதற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வைரசு பரவுதலை எதிர்ப்பதற்காக சிவில் பாதுகாப்புதுரையின் தலைவருக்கு தனிநபர் அல்லது பொது சொத்துக்களை புதிய மருத்துவமனைகளை உருவாக்குவதற்கு கோரிப்பெறுவதற்கான அதிகாரங்ள் வழங்கப்பட்டுள்ளது. இழப்பீடுகள் வழங்கப்படும்.
அவசரக்காலத்திற்கு சிறப்பு மேலாணையாளருக்கு (Super Commissario all’Emergenza) மருத்துவமனைகளை பலப்படுத்துவதற்கு தனிநபர் மற்றும் பொது சொத்துக்களை கோரிப்பெறுவதற்கான முழு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ன.
மருத்தவர்களின் மேலதிக பணிப் புரியும் நேரத்திற்கான மானியம் ஒதுக்கீடுகள்
மருத்தவர்களின் மற்றும் சுகாதார பணிகளில் வேலை செய்வோர்களின் மேலதிக பணிப் புரியும் நேரத்திற்கான மானியம் அரசாங்கத்தால் வழங்கப்படும். இந்த அவசரகாலத்தை கருதி 2020இல் மேலதிக பணிப் புரியும் நேரத்திற்கான மாநிலத்தின் நிதி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படும்.
அரசாங்க பத்திரங்களூடாக 25 பில்லியன் கடன்
அவசரகால நடவடிக்கைகளின் நிதி தேவைக்காக 25 பில்லியன் வரை கடன் எடுக்க திட்டம் செய்யப்பட்டுள்ளது. இந்த கடன் திரட்டுவதற்கு 25 பில்லியன் மதிப்புக்குரிய அரசாங்க பத்திரங்கள் (Titoli di Stato) வழங்கப்படும்.
இராணுவ மருத்துவர்களும் மற்றும் செவிலியர்களும் இணைக்கப்பட்டுள்ளார்கள்
கொரோனாவைரசு பரவுதலின் அவசர காலத்தை எதிர்கொள்வதற்காக தற்காலிமாக 120 மருத்துவர்களும் மற்றும் 200 இராணுவ செவிலியர்களும் ஒரு வருட காலத்திற்கு பொது பணிகளில் இணைக்கப்பட்டுள்ளார்கள்.
சட்டம் எண் 104: 2 மாதங்களில் மேலும் 24 நாட்கள் விடுமுறை அனுமதி
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்பவர்கள் அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் 24 நாட்கள் வரை விடுமுறை கேட்க முடியும். சட்டம் எண் 104 இனால் வழங்கப்பட்ட அனுமதிகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 12 நாட்கள் அதிகரிக்கப்படலாம்.
விசாரணைகள் நிறுத்தம் – ஏப்ரல் 15 வரை நீடிப்பு
கோவிட் -19 அவசரநிலையை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒன்றான விசாரனைகளின் நிறுத்தம் மார்ச் 22-ல் இருந்து ஏப்ரல் 15 வரை நீடிக்கப்படுகிறது.
பணியிடங்களை சுத்திகரிப்பதற்கான வரிக் கடன்
பணியிடத்தின் சுகாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்குடன், மேலும் கோவிட்-19 வைரசின் பரவுதலை கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவும், தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்கள் பணியிடத்தையும் வேலைக் கருவிகளையும் முற்றிலும் சுத்திகரிப்பதற்கான செலவுகளில் 50% ( அதிகபட்சம் 20.000 யூரோக்கள் ) வரிக் கடன் வழங்கப்படும். இவ் அங்கிகாரமானது 2020 ஆம் காலத்தின் மொத்த நிதி ஒதுக்கீடு (50 மில்லியன்) தீரும் வரை வழங்கப்படும்.
பொதுப் போட்டிகளின் நிறுத்தும், மற்றும் SMART வேலை பொது நிர்வாகத்திற்கு “அன்றாட வழக்கமாக” மாற்றம்
‘இத்தாலி மறுவாழ்வு’ (Cura Italia) ஆணையில் ‘அனைத்துப் பொதுப் பணிகளுக்கான போட்டிகள் (Concorsi pubblici) இரண்டு மாதங்களுக்கு இடை நிறுத்தம் செய்யப்படும், பாடத்திட்டம் அல்லது மின்னணு மூலம் மதீப்பீடு செய்யப்படும் பரிட்சைகள் நடைபெற அனுமதி உண்டு’ என்று பொது நிர்வாக அமைச்சர் Fabiana Dadone விளக்கினார். மேலும் ‘கொரோனா வைரசு அவசரநிலை முடியும் வரை Smart வேலை எளிதான வழியாகவும் மற்றும் பொது அலுவலகப் பணியாளர்கள் தமது கருவிகளுடனே மேற்கொள்ளக்கூடிய மாற்று வழியாக விளங்கும்.’
Smart வேலையை மேற்கொள்ள முடியாவிட்டால், நிர்வாகங்கள் முந்தைய விடுமுறை, விடுப்பு, வங்கி நேரம் போன்ற கருவிகளைப் பயன்படுத்த அனுமதி உண்டு. இக் கருவிகள் தீர்ந்திடும் சூழ்நிலையில் தொழிலதிபர்கள் பணியாளர்களை வேலையிலிருந்து விலக்க முடியும், ஆனால் அனைத்து ஊதிய விடுப்பிற்கும், சிற்றுண்டி கொடுப்பனவைத் தவிர்த்து, உரிமைகள் வழங்கப்படும்.
அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் திரும்பச் செல்வதற்கான Voucher
கொரோனா வைரச் காரணமாக நிறுத்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் ஆண்டு இறுதிக்குள் பயன்படுத்தக் கூடிய வவுச்சர் வழங்கப்படும். சினிமா, நாடகங்கள், கச்சேரிகள் மற்றும் அருங்காட்சியங்களிற்க்கான நுழைவுச்சீட்டுகளை 8 பங்குனிக்கு முதல் வாங்கிய நபர்கள் Voucher மூலமாக திரும்பப்பெற முடியும்; இதனைப் பெறுவதற்க்கு ஒரு கோரிக்கை விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையில் குறிப்பிடத் தக்கதாக உள்ளது.
சினிமா மற்றும் நேரடி நிகழ்வுகளை அதிகரிப்பதற்கு 130 மில்லியன் நிதித் தொகை ஒதுக்கப் பட்டுள்ளது, மற்றும் Siae 2019 ஊதியத்தின் ஒரு பகுதியை எழுத்தாளர்கள், கலைஞர்கள், மொழிபெயர்ப்பாளர், பதிப்புரிமை சேகரிக்கும் சுயதொழிலாளர்களின் உதவிக்காக ஒதுக்கப்படும்.
பாடசாலை, தொலைதூரக் கல்வியை மேம்படுத்த 85 மில்லியன் ஒதுக்கீடு
தொலைதூரக் கல்வியை வலுப்படுத்த பாடசாளைகளுக்கு 85 மில்லியன் ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, தளங்களின் உரிமங்களை வாங்குவதற்கு 10 மில்லியனும், பாடசாலை ஊழியர்களின் பயிற்சிக்கு 5 மில்லியனும், குறைந்த நல்வாழ்வுள்ள மாணவர்களுக்கு இரவலில் பயன்படுத்த தொழில்நுட்ப சாதனங்களை (Tablet, மடிக்கணினிகள்) வழங்கிவதற்காக 70 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன்.
டாக்சி (Taxi)
ஓட்டுனரின் இருக்கைக்கும் வாடிக்கையாளரின் பின் இருக்கைகளுக்கும் இடையில் தடுப்பு கண்ணாடி பொருத்தும் டாக்சி உரிமையாளர்களுக்கு அரசாங்கம் 2 மில்லியன் நிதி ஒதுக்குகின்றது.
நன்கொடைகளுக்கு வரி விளக்குதல்
கொரோனாவைரசின் பரவுதலுக்கு எதிராக செயற்படும் அரசாங்க நிறுவனங்களுக்கு, உள்ளூர் நிறுவனங்களுக்கு மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு தனி நபர்கள் மற்றும் வர்த்தக சாரா நிறுவனங்கள் நன்கொடை செய்தால் 30 ஆயிரம் யூரோக்கள் வரை 30% வரி விளக்கு மூலம் பயனடைவார்கள்.
மேலதிக தொடர்புகளுக்கு நீங்கள் எங்களை மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளலாம்: contact@tamilinfopoint.it
கொரோனா வைரசு பரவுதலால் இத்தாலியில் விதிக்கப்பட்ட அவசரக்கால சட்டங்கள் சம்மந்தமாக கேள்விகள் மற்றும் உதவிகள் பெறுவதற்கு எம்மை தொலைபேசி ஊடாக தொடர்புகொள்ளலாம்:
(10:00 – 13:00) – 0039 333 744 1711
(15:00 – 18:00) – 0039 327 755 0188 – 015779020
(18:00 – 21:00) – 0039 389 101 9911