கொரோனாவைரசு, உச்சக் கட்டம் ஞாயிறு வரலாம்.
அவசரகால நெறிமுறைகள் வெற்றிபெற்றால் தொற்றுதலின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நெறிமுறைகளின் கடைபிடித்தலை இப்பொழுது நிறுத்தி விட்டால் நிலைமை இன்னும் சிக்கலாக அமையும். எமது வாழ்க்கை முறையை இன்னும் பல மாதங்களுக்கு மாற்றி அமைக்க வேண்டி வரும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றார்கள்.
அவசரகால நெறிமுறைகள் சரியாக கடைபிடிக்கபட்டது என்றால் எதிர்பார்க்க படும் அந்த பரவுதலின் உச்சக்கட்டம் ( நோய்ப்பரவு வளைவு அது பற்றிய விளக்க கட்டுரை) 22 மார்ச் ஞாயிறு அன்று வரலாம் என்று கணிக்கப்படுகிறது. இதற்கு பின்பு மருத்துவ நிறுவனங்களுக்கு இருக்கும் அழுத்தம் குறையும் என்று நம்பப்படுகிறது. முழுமையாக நோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சரியான மருத்துவ மருந்துகளும் மற்றும் வைரசுக்குரிய தடுப்பூசியினால் மட்டும் தான் முடியும். அதுவரை எமது வாழ்வியல் முறையை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம்.
“இந்த ஞாயிறுக்கு பின்பு வைரசின் பரவுதல் குறையும்” என்று Boston “Network Science Institute” ஆய்வு நிறுவனத்தை வழிநடத்தும் Alessandro Vespignani கூறியுள்ளார். “எல்லோரும் சரியாக அவசரகால நெறிமுறைகளை கடைபிடித்தால் அதின் பயன்கள் வருகின்ற கிழமைகளில் காணலாம்” என்றும் தெரிவித்துள்ளார்.
“உச்சக் கட்டத்தை அடைந்தால் எல்லாம் சரி ஆகும் என்பது இல்லை. அதற்கு பின்பு நெறிமுறைகளை கடைபிடிக்காட்டில் வைரசு பரவுதலின் இன்னும் ஒரு உச்சக் கட்டத்தை நோக்கி செல்வோம்” என்று Vespignani எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எங்கள் நகர்வுகளின் விளைவாக மட்டும் தான் வைரசு பரவுகிறது. தொடர்ச்சியாக அரசாங்கம் விதித்த நெறிமுறைகளை மதித்தும் அதை கடைப்பிடித்தும் நாம் இருக்க வேண்டும்.
“இந்த கொரோனாவைரசின் பரவுதல் ஒரு உலகப் போர் போன்றது. இதை வென்று வருவோம் என்பது உறுதியாக இருந்தாலும் இதை போன்ற பல போர்களை மற்றும் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும். தடுப்பூசி வரும் வரை நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலக்கட்டம் கண்டிப்பாக எங்கள் வாழ்வியல் முறையையும் எதிர்கால சந்ததிகளின் வாழ்வியல் முறையையும் மாற்றி அமைக்கும் என்பது நிச்சயம்.”