தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி -Brusaferro
“எல்லா பிராந்தியங்களிலும் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகின்றன, ஆனால் நாட்டை கணிசமாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கும் பிராந்தியங்களுக்கு இடையில் வேறுபாடுகள் உள்ளன. Lombardia வில் கூட தொற்றுக்கு உள்ளானவர்களின் தினசரி எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படுகிறது “. COVID -19 தொற்றுநோயின் போக்கைக் குறித்து வாராந்திர செய்தியாளர் கூட்டத்தில் உயர் சுகாதார நிறுவனத்தின் (I.s.s) தலைவர் Silvio Brusaferro கூறினார்.
தொற்று வளைவு நிலையானதாக மற்றும் வீழ்ச்சியடைந்து வருகிறது. இப்போது நாம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொற்றுக்கு உள்ளானவர்களை நோக்கிச் செல்லும்போது, பாதிக்கப்படடவர்களை உடனடியாக அடையாளம் காண்பது மிகவும் உணர்திறன் வாய்ந்ததாக இருக்கும்.
மேலும், அறிகுறியற்ற தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“இன்றுவரை வைரசின் பரவுதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது ஆகையால் தனிப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எங்களால் தளர்த்த முடியாது” என்று Brusaferro விளக்குகிறார்.
மேலும், “அடுத்தடுத்த வாரங்களில் வரவிருக்கும் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கைகள் அதிகரிக்கக்கூடலாம் என்பதை அறிந்து, ஆனாலும் அவற்றைத் தடுக்கும் திறன் நம்மிடம் உள்ளது என்பதையும் அறிந்து நாம் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லலாம் ” என்று அவர் உறுதியளித்துள்ளார்.