Piemonte: வெளிப்புறங்களில் முகக்கவசங்கள் அணிதல் கட்டாயமாகிறது
நாளை முதல் ஜூன் 2 செவ்வாய்க்கிழமை வரை, Piemonte மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வீட்டை விட்டு வெளியேறும்போதெல்லாம் மூக்கு மற்றும் வாயை முகக்கவசங்களால் மூடவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். பாதுகாப்பு தூரத்திற்கு உத்தரவாதம் இல்லாமல் மற்றவர்களைச் சந்திக்கும் போது வைரசின் பரவலைத் தடுக்க முடியாத பட்சத்தில் இந்த முடிவு எடுக்கப்படும்.
முடக்கநிலை தளர்த்தப்பட்ட முதல் வார இறுதியில் club, உணவகங்கள் திறக்கப்பட்டு தெருவில் கூடிய கூட்டங்களை அடுத்தும் எதிர்வரும் ஜூன் 2ன் விடுமுறை நாளை முன்னிட்டும் இந்த அச்சம் வெளிப்பட்டுள்ளது.
நேற்று மாலை பரவிய தொற்றுநோய்களின் தரவுகளின் அடிப்படையில், அதற்கு முந்தைய நாளை விட இரட்டிப்பாக, 86 புதிய நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன, மேலும் 24 நேர்மறையான பரிசோதனைகளும் 14 உயிரிழப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 374 பேர் குணமடைந்து 70 பேர் தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் முந்தைய நாளை விட இரண்டு குறைவாகும்.
பிராந்தியங்களுக்கிடையேயான எல்லைகளை மீண்டும் திறப்பதன் மூலம், ஜூன் 3 முதல் கட்டம் 3 ஆரம்பமாகும். ஆகவே, Piemonteயிலும் பக்கத்து பிராந்தியங்கள் நடைமுறைப்படுத்தும் நெறிமுறைகளை கையாளவேண்டும். முகக்கவசங்கள் அணிவதற்கான கட்டாயம் Lombardia மற்றும் Venetoவில் ஏற்கனவே இருக்கின்றது. எவ்வாறாயினும், தொற்றுநோயின் வளர்ச்சியை கண்காணிக்கும் 21 பாதுகாப்பு அளவுருக்களின் வாராந்திர கண்காணிப்பு மூலம், சுகாதார அமைச்சிலிருந்து வெள்ளிக்கிழமை வரும் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே இது கணிக்கப்படும்.
இத் தரவுகளுக்காக காத்திருக்கும் ஆளுநர் Alberto Cirio இன்று முன்னரே இப் புதிய கட்டளையை வெளியிடவுள்ளார்: பாதுகாப்பு தூரத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாதபோது முகக்கவசங்கள் உண்மையில் கட்டாயமாகும். இருப்பினும், சனிக்கிழமை மாலை மற்றும் திங்கள் பிற்பகல் வெளியாகிய புகைப்படங்களிலிருந்து சரியான தூரத்தை அளவிடுவதை தனிநபர்களின் மதிப்பீட்டில் விட முடியாது என்பதை தெளிவுபடுத்தியது. எனவே, நாளை முதல், ஒவ்வொரு பிராந்தியமும் ஏற்கனவே விதித்திருப்பது போல், கடைகளுக்குள்ளும் வெளிப்புறங்களிலும் முகக்கவசங்களை அணிய வேண்டும்.