சுற்றுலாப் பயணத்திற்கான சலுகை
இத்தாலியில் விடுமுறை நாட்களை கழிப்பதற்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள விரும்பும் குடும்பங்களுக்கு “Bonus vacanza” எனும் சலுகையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
யார் விண்ணப்பிக்க முடியும்?
ISEE 40 ஆயிரம் யூரோக்களுக்கு மேல் இல்லாத குடும்பங்கள் இதனைப் பெற முடியும். இதற்கு விண்ணப்பிக்கும் நபரை விட குடும்பத்திலுள்ள ஏனைய குடும்ப நபர்களும் இதனைப் பயன்படுத்த முடியும். ஆனால் இச் சலுகையை ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டும்.
என்ன தொகை?
குடும்ப அமைப்புக்கு ஏற்ப மொத்தத் தொகை மாறுபடும். எனவே, இது ஒரு தனி நபருக்கு, குறைந்தபட்சம் 150 யூரோவிலிருந்து, இரண்டு நபர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 300 யூரோக்கள், இரண்டு நபர்களுக்கு மேல் உள்ள ஒரு குடும்பத்திற்கு 500 யூரோக்கள் வரை செல்கிறது.
எப்படி பயன்படுத்துவது?
தங்கும் விடுதிகள் மூலம் பெறப்பட்ட சேவைகளுக்கு 80% தள்ளுபடி மதிப்புடையது. மீதமுள்ள 20% வரி வருமானத்தில் வரி விலக்கு அளிக்கிறது. ஒரே தீர்விலும், ஒரு நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட சேவைகளுக்காகவும் செலவுகள் செய்யப்பட வேண்டும். அவை அனைத்தும் பற்றுச்சீட்டுகள் மூலம் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
எப்பொழுது விண்ணப்பிக்க வேண்டும்?
ஜூலை 1, 2020 முதல் டிசம்பர் 31, 2020 வரை விண்ணப்பிக்க முடியும். இந்த கால எல்லைக்குள் செலவுகள் செய்யப்பட வேண்டும். இச் சலுகையை பெறுவதற்கு IO எனும் செயலியை தொலைபேசியில் தரவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு SPID எண் அல்லது மின்னணு அடையாள அட்டை (carta d’identità digitale) அவசியமாகும்.
விண்ணப்பத்திற்கான பதிலை சரியாகப் பெற்றவுடன், அந்த தொகை வழங்கப்பட்டு அதனுடன் தொடர்புடைய QR குறியீட்டை தங்கும் விடுதிக்கு தெரிவிக்க வேண்டும், அவர்கள் வருவாய் நிறுவனத்தின் (Agenzia delle entrate) வலைத்தளத்தில் செலுத்த வேண்டிய தொகையுடன் அந்தக் குறியீட்டை உள்ளிடுவார்கள். பின்னர், தள்ளுபடி கணக்கிடப்படும்.
இச்ச சலுகையை AirBnb அல்லது Booking.com போன்ற சேவைகளுடன் பயன்படுத்த முடியாது. அதற்குப் பதிலாக பயண முகவர் மற்றும் சுற்றுப்பயண வழிக்காட்டி மூலம் மேற்கொள்ளும் பயணங்களுக்கு பணம் செலுத்த பயன்படுத்தலாம். எல்லா தங்கும் விடுதிகளிலும் இச் சலுகையை ஏற்க மாட்டார்கள், எனவே, பயணிப்பதற்கு முன், தேர்ந்தெடுக்கப்பட்ட விடுதியில் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும்.