கறுப்பு ஜூலையின் ஆறாத வடுக்கள்
பல வருடங்கள் கடந்திருந்தாலும் இன்று வரை ஆடிக்கலவரத்தை அனுபவித்த தமிழனால் மட்டுமல்ல கறுப்பு ஜுலைக் காலத்தில் வாழ்ந்த தமிழனால் மட்டுமல்ல எவராலும் மறக்கமுடியாத ஒரு கறுப்பு நாளாக இந்த கறுப்பு ஜூலை நினைவுகூறப்பட்டு வருகிறது.
1983 ஜூலை மாதம் சிங்களப் பேரினவாத ஆட்சியால் தமிழ்மக்களுக்கு எதிராக மிகக் கொடூரமான வன்முறை செயல்கள் கலவரங்கள் திட்டமிட்டு நடாத்தப்பட்டன என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே.
இந்தத் திட்டமிட்ட இனக்கலவரமே பலர் படுகொலை செய்யப்பட்டும் உடைமைகள் இழக்கப்பட்டும் சொந்த நாட்டிலும் வெளிநாட்டிலும் அகதிகள் ஆக்கப்பட்டும் ஈழப்போர் உக்கிரமாகவும் காரணமாக அமைந்திருந்தது. 1983 ஆம் ஆண்டு ஜுலை இனக்கலவரத்தின் விளைவுகளை இன்றுவரை ஈழத்தமிழ்மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
அவ்வகையில், இக் கலவரத்தின் போது உங்களில் பலர் இச் சம்பவங்களுக்கு முகம்கொடுத்திருப்பீர்கள். பலர் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் குடியேறியிருப்பீர்கள். மேலும், இன்று இக் கலவரத்தின் சாட்சியங்களாக உங்களில் பலர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றீர்கள்.
எனவே, இப்படியான சூழ்நிலைகளில் நேரடியாக அல்லது மறைமுகமாக நீங்கள் அனுபவித்த வேதனைகளையும் உணர்வுகளையும் உங்களது அனுபவங்களையும் பிரச்சனைகளையும் இளையோர்களுக்கும் பிற மக்களுக்கும் கொண்டு சேர்க்கவேண்டிய வரலாற்றுக் கடமையை உணர்ந்து உங்களது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளலாம்.
சிறிய skype வழி நேர்காணல் மூலமாகவோ அல்லது கட்டுரை கவிதைகள் ஊடாகவோ உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிரலாம்.
இது சார்ந்த மேலதிக தகவல்களுக்கு எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
தொலைபேசி எண்கள்: +39 333 744 1711 / +39 370 318 9655