இத்தாலி மேற்பிராந்திய நகரங்களில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் வணக்கநிகழ்வுகள்
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திரத் தமிழீழம் மலரட்டும் ” – என்று அறைகூவி, தன் மக்களுக்காக பன்னிரு தினங்கள் நீராகாரம் அருந்தாது அகிம்சை வழியில் தன்னையே அர்ப்பணித்த தியாகச் செம்மல் மாவீரன் திலீபனின் 33ஆவது நினைவாண்டு வீரவணக்க நிகழ்வுகள் (27/09/2020) ஞாயிற்றுக்கிழமை, முறையே Genova திலீபன் தமிழ்ச்சோலை, Bologna திலீபன்தமிழ்ச்சோலை, Biella கலாச்சாரமண்டபம், Reggio Emilia ஆகிய இடங்களில் உணர்வுபூர்வமாக வீரவணக்கம் செலுத்தப்பட்டு எழிச்சி நிகழ்வுகழும் நடைபெற்றது.
இந்நாளில் இளையோர்களின் சிறப்பு வேலைத்திட்டமாக தாயக மாணவர்களின் கல்வியை மேம்படுத்தி அவர்களுடன் உறவை உருவாக்க உறவை வளர்ப்போம் எனும் திட்டமும், தமிழர் வரலாற்றை அழியவிடாது காக்கும் நோக்கோடு தியாக தீபம் திலீபனின் வாழ்க்கை வரலாற்றை தமிழ், இத்தாலி மொழிகளில் கையேடு செய்து வெளியிடப்பட்டது.
காந்திய வழியில் போராடிய திலீபன் அவர்களின் போராட்டம் ஈழத்தமிழ் மக்களில் மூட்டிய விடுதலை நெருப்பு இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது. தாயக விடுதலை நோக்கிய திலீபனின் பயணம் இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் உலக சரித்திரத்தில் நிச்சயம் இடம்பெறும். தாயகவிடுதலைக்கான ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டாலும் தியாகி திலீபன் போன்ற தியாக மறவர்களின் அர்ப்பணிப்புகள் உருவாக்கிய விடுதலை வேட்கை என்றுமே வீணாகிவிடாது. தியாகி திலீபன் விரும்பிய மக்கள் எழுச்சியே விடுதலைக்கான பாதைகளைத் திறக்கும். வீரனின் கனவு நீறுபூத்த நெருப்பாக தமிழர்களின் நெஞ்சங்களில் இன்றும் எரிந்து கொண்டே தான் இருக்கிறது!
Genova நகரில் இடம்பெற்ற வணக்கநிகழ்வு
Bologna நகரில் இடம்பெற்ற வணக்கநிகழ்வு
Biella நகரில் இடம்பெற்ற வணக்கநிகழ்வு
Reggio Emilia நகரில் இடம்பெற்ற வணக்கநிகழ்வு