மாவீரர் நாள் 2020

“எமது போராளிகளின் அற்புதமான தியாகங்களும், எமது மக்களாகிய உங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடுமே எமது போராட்டத்தை உலக அரங்கில் பிரசித்தப்படுத்தியுள்ளது. நீதியையும், தர்மத்தையும் சுதந்திரத்தையும் இலட்சியமாகக் கருதிய எமது விடுதலைப் போராட்டம் நிச்சயம் வெற்றியடைந்தே தீரும்” 

– தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன்

புலத்தில் வாழும் ஈழத்தமிழராகிய நாமும் இத்தாலி நாட்டில் தமிழரின் அடையாளம் இனவழிப்பு உட்பட பல விடயங்களில் பட்டறிவு பெற்ற தமிழ் இளையோரின் அர்ப்பணிப்பாலும் விடாமுயற்சியினாலும் தற்போதைய சூழலில் உச்ச பயன்பாட்டில் உள்ள சமூகவலைத்தளங்களூடாக பல்வேறு வகையான தேசியம் சார்ந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதும் அனைவரும் அறிந்ததே அந்தவகையில் இத்தாலி நாட்டில் வாழும் ஈழத்தமிழ் சிறார்கள் மாவீரர் நாள் சார்ந்து வெளிப்படுத்திய ஆக்கங்களை இங்கு காணலாம்.

ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலை – மாவீரர் கவிதைகள்

மாவீரர் நாள் நவம்பர் 27

தாயகமே தாயாக…..
தலைவனே உயிராக….
தமிழ் மானம் பெரிதாக…
தம் உயிர் தந்தவர்களே…..
ஆக்கம் வளர்நிலை 02 கிருபாகரன் கிருஷிகன்
மாவீரர் நாள்
சகோதரா ஆயுதம் கொண்டு போராட
தேகத்தில் ஈரம் இல்லை….
ஆயுத எழுத்து கொண்ட மொழி
அறிவினால் தமிழினை வாழ….
வைப்போம்….
ஆக்கம் வளர்நிலை 02 பிரதீபன் ஜெசிந்

மாவீரர் துயிலும் இல்லம்

மாவீரர் துயிலும் இல்லம்…..
ஒரு மகத்தான வீரத்தடம்…
வழிந்தோடும் குருதிக்கூடம்….
இது வரலாறு தலைநிமிர்ந்த இடம்
ஆக்கம் வளர்நிலை 04 கவிதாசன் அபிராம்

காவல் தெய்வங்கள்

காவிய வீரர்கள் வாழ்கிற…
கல்லறை கார்த்திகை மாதம்….
காத்தவர் வென்றவர் வந்திருப்பார் என்றே….
காத்துக் கிடக்கிறோம்,நாளும்…..
வேங்கைகள் தூங்கிடும் என்று ….
எண்ணிட, வேண்டாம்….
அவர்கள் செய்திட்ட தியாகங்கள்…
தெய்வத்துக்கும் மேலே….
மாவீரர்கள் காவல் தெய்வங்கள் தானே!
ஆக்கம் வளர்நிலை 04 தவக்குமார் நிலாஜினி

தேசத்தின் பூக்கள்

நாட்டின் விடுதலைக்காய்….
தம் உயிரை அச்சமென எண்ணிய…
வேங்கைகள் மாவீரர்கள்….
விடுதலைத் தாகத்துடன் கல்லறையில்….
துயிலுகின்ற ஈழத்து வேர்கள்…
மாவீரர்கள் தேசத்துன் பூக்கள்….
எம் இன மானத்தைக் காத்திடவே…
எரிமலை தீ என வெடித்தவர்கள்….மாவீரர்கள்….
ஆக்கம் வளர்நிலை 04 தவக்குமார் நிஜிதா

கார்த்திகை மாதம்

விடுதலைக்கு விதையாகி….
விடி வானில் புயலாகி..
மானமதை காத்திடவே….
மாவீரராய் கல்லறையில்
தூங்கிறீரோ!
கார்த்திகை மாதத்திலே….
காந்தள் மலருடனே….
கத்தித் தவிக்கிறோம்….
உம்மை காண ஒரு வரம்
தாறீரோ!
ஆக்கம் வளர்நிலை 04 தவக்குமார் அக் ஷயா

மாவீரர்

தேச விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்தவர்கள்…
நாம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக உயிர் விட்டவர்கள்…
மாவீரர்கள் வீரத்தின் இலக்கணமானவர்கள்….
ஆண் பெண் என்ற வேறுபாடின்றி போரிட்டு சாதனை படைத்தவர்கள்
ஒழுக்கத்தின் நெறி வாழ்ந்து காட்டியவர்கள்…
மாவீரர் நாள் கார்த்திகை மாதம்27ஆம் திகதி தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் நினைவு கூரப்படுகிறது…..
மாவீரர்களை நாம் என்றும் மறவாதிருப்போம்….
ஆக்கம் வளர்நிலை 06 ஜெயகாந்தன் அனுஸ்கா
சரித்திர நாயகர்கள்
மண்ணுக்காய் மரணித்த வீரர்கள்…
தமிழீழ கனவோடு களமாடியவர்கள்….
சாவரும் போது அஞ்சிடாதவர்கள்….
சரித்திர நாயகர்கள் எம் மறவர்கள்….
தமிழினமே மாவீரத்தால் ….
தலைநிமிர்கிறது…..
ஆக்கம் வளர்நிலை 06 தேவராசா ஆரணி

வீர காவியமானவர்கள்

காற்றோடு கலந்தவர்களே….
தமிழர் மானத்தைக் காக்க…
மரணத்தை வென்ற மாவீரர்களே….
வீர காவியமான கண்மணிகளே….
நாங்கள் உங்கள் நினைவுகளை மட்டும் இல்லை…
கனவுகளையும் சுமக்கின்றோம்…
ஆக்கம் வளர்நிலை 06 ஈஸ்வரன் காருஜன்
காவல் தெய்வங்கள்
மாவீரர்கள் நம் மனக்கோவில்களில்
குடியிருக்கும் தெய்வங்கள்!
நாம் அல்லும் பகலும் வணங்கும்
காவல் தெய்வங்கள்!
ஆக்கம் வளர்நிலை 06 கவிதாசன் அஸ்வினா
விடியலுக்காய் விதைக்கப்பட்டவர்கள்
மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களே!
மானம் ஒன்றே வாழ்வென
கொண்டவர்களே….
நீங்கள் மண்ணில் புதைக்கப்படவில்லை….
தமிழீழ விடியலுக்காய்….
விதைக்கப்பட்டவர்கள்!
ஆக்கம் வளர்நிலை 07 தேவராசா ஆர்த்தி

உயிர் கொடை தந்தவர்கள்

உலகில் சிறந்தவரே…..
உயிர் கொடை தந்தவரே….
தாய் நாட்டைக் காக்க….
உயிர் நீத்த நாயகர்களே….
திரையில் பார்த்ததை தரையில் நிருபித்த
சரித்திர நாயகர்கள்…
மண்ணுக்காய் மண்ணுக்குள்
மாண்ட மாவீரர்களே!
உங்கள் நினைவு எங்கள் உயிர்
உள்ள வரை வாழும்……
ஆக்கம் வளர்நிலை 07 இராஐ்குமார் லதீக்கா

மாவீரர் நாள்

தமிழீழத்தின் மாவீரர் நாள் ….
நவம்பர் 27…..
மண்ணுக்காகவும் மக்களூக்காகவும் …
போராடிய மாவீரர்களூக்கு …..
நினைவு கூரவும் …..
நாளாகும்….
ஆக்கம் வளர்நிலை 07 ரூபகுமார் சானுகா

மாவீரர்களின் தியாகம்

மண்ணுக்குள் உறங்கும் பெரு…
வீரமிது…
மண்மீட்பில் தமையீர்ந்த
உயிரீகமிது…
கந்தகப் பொதிசுமந்த சந்தண
மேனியிது….
செந்தமிழ் ஈழத்தின் மானமா
வீரமிது….
ஆக்கம் வளர்நிலை 09 சுதாகரன் அபிநயா

மாவீரர்கள்

சாகாத சிரஞ்சீவிகள்…
மானசீக இலட்சியவாதிகள்!
தியாகத்தின் சிகரங்கள்…
சரித்திர நாயகர்கள்!
எங்கள் இதயக்கோவிலில் ……
நாள்தோறும் பூசிக்க வேண்டியவர்கள்!
ஆக்கம் வளர்நிலை10 இராஐ்குமார் லதீக்கன்

தியாகச் சுடர்கள்

தம் தாய் நாட்டுக்காகவும்…..
தம் மக்களின் விடுதலைக்காகவும்…..
தம் உயிரை ஈந்த ….
தியாகச் சுடர்கள் மாவீரர்கள்!
ஆக்கம் வளர்நிலை 10 ரூபகுமார் ஐவீகா

வரவிற்காய் காத்திருக்கின்றோம்

துயில் கொள்ளும் மாவீரர்களே!
எழுந்து வாருங்கள்…இது உங்கள்
மாதம் கார்த்திகை 27….
காவியம் படைத்தவர்களே….
சரித்திர நாயகர்களே!
காந்தள் மலர்ந்துவிட்டாள்….
உறங்கியது போதும்….கல்லறை விட்டு
எழுந்து வாருங்கள்….உங்கள்
வரவிற்காய் காத்திருக்கிறோம்….
விடுதலை நாயகர்களே!
மணி ஓசை கேட்க, மலர்
தூவி வணங்கிட,வண்ண மலர்களின்…
மணம் பரப்ப,ஈழம் காண வாருங்கள்….
விடுதலை நாயகர்களே!
ஆக்கம் வளர்நிலை 12 நந்நகுமார் கிருத்திகா

கல்லறைகள்

கல்லறைகள் உயிர் பெறும்….
கார்த்திகை மாதம்…..
காந்தள் மலர்ந்து சிரம் ..,,
தாழ்த்தி வணங்கும்….
காவியநாயகர்கள்….
கண்விழிப்பார் கல்லறையில்….
உறவுகள் உங்களின் தீரம்…
நினைந்து உருக….
விதைக்கப்பட்ட கருவறைகள்…..
புத்துயிராய் பிறப்பெடுக்கும்….
அணைதாண்டி உணர்வலைகள்
வீறென பெருக்கெடுக்கும்!
ஆக்கம் வளர்நிலை 12 தேவராச

உங்கள் கவனத்திற்கு