சனவரி 16 முதல் மார்ச் 5 வரை நடைமுறையில் இருக்கும் புதிய ஆணை
Covid-19 தொற்றுநோய்ப் பரவலை கட்டுப்படுத்த சனவரி 16 முதல் மீண்டும் இறுக்கமான விதிமுறைகளை நடைமுறைப்படுத்த இத்தாலி அரசு புதிய ஆணையை பிறப்பித்துள்ளது. இவ் ஆணை மார்ச் 5 வரை நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 5 வரை உடற்பயிற்சி நிலையங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும். ஆனால் மஞ்சள் நிறப் பிரதேசங்களில் மட்டுமே அருங்காட்சியகங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை திறக்கப்பட்டிருக்கும். மேலும் உணவு மற்றும் பானங்கள் மாலை 6 மணி வரை மட்டுமே bar களில் வாங்க முடியும் போன்ற இறுக்கமான விதிமுறைகள் இந்த ஆணை உறுதிப்படுத்துகிறது.
மேலும், நேற்றைய தொற்றுநோய் கண்காணிப்புத் தரவுகளின் அடிப்படையில், பிராந்திய நிறப் பிரிவுகளும் உறுதிப்பட்டுள்ளன. அதிக ஆபத்துள்ள பகுதிகள் தானாக செம்மஞ்சள் நிறத்திற்கு செல்லும் என்பதை குறிப்பிடப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு மற்றும் வெளியில் மற்றும் உட்புறத்தில் முகக்கவசம் அணிய வேண்டிய கடமை ஆகியவற்றை மீண்டும் வலியுறுத்துகிறது. “பிற ஐரோப்பிய நாடுகளில் நிலவரங்கள் நல்லதல்ல. இத்தாலியில் அதிக Rt ஐ எதிர்பார்க்கிறோம், அது 1.10 ஐ எட்டக்கூடும், கடந்த வாரம் இது 1.03 ஆக இருந்தது ” என சுகாதார அமைச்சர் Roberto Speranza எச்சரித்துள்ளார்.
சிவப்பு, செம்மஞ்சள் மற்றும் மஞ்சள் நிறப் பகுதிகள்
சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், 18 சனவரியிலிருந்து:
- சிவப்பு நிறப் பகுதி: Lombardia, Sicilia மற்றும் Bolzano.
- செம்மஞ்சள் நிறப் பகுதி: Abruzzo, Friuli Venezia Giulia, Lazio, Liguria, Marche, Piemonte, Puglia, Umbria, Valle D’Aosta, Calabria, Emilia-Romagna மற்றும் Veneto.
- மஞ்சள் நிறப் பகுதி: Basilicata, Campania, Molise, Trento, Sardegna e Toscana. Toscana, Molise மற்றும் Campania.
பிராந்திய எல்லைகள்
மஞ்சள் நிறப் பகுதிகளிலிருந்தாலும் வசிக்கும் பிராந்தியத்திலிருந்து வேறொரு பிராந்தியதுக்கு செல்ல முடியாது. புதிய ஆணையின் படி, «பிப்ரவரி 15, 2021 வரை, நிரூபிக்கப்பட்ட வேலை தேவைகள் அல்லது அவசியமான சூழ்நிலைகள் அல்லது சுகாதார காரணங்களுக்காகத் தவிர பிராந்தியங்களுக்கு இடையிலான எந்தவொரு நகர்வுகளும் தடைசெய்யப்பட்டுள்ளது».
உறவினர் வருகை
மஞ்சள் நிறப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் தங்கள் வசிக்கும் பிராந்தியத்திற்குள் உள்ள உறவினர், நண்பர்கள் வீட்டுக்குச் செல்ல அனுமதி வழங்க்கப்படுகிறது. அதாவது, காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையில், ஓர் நாளில் ஒருமுறை மட்டும் உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்கு 2 நபர்கள் மட்டுமே செல்ல முடியும். மேலும், 14 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு மற்றும் ஊனமுற்றோர் அல்லது தன்னிறைவு பெறாத நபர்களையும் அழைத்துச் செல்லலாம்.
உணவு எடுத்துச் செல்லும் சேவைக்கு தடை
சிவப்பு அல்லது செம்மஞ்சள் பகுதிகளில், bar மற்றும் உணவகங்கள் மூடப்பட்டிருக்கும், ஆனால் மஞ்சள் நிற பகுதிகளில் மாலை 6 மணி வரை திறக்க முடியும், அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே மேசையில் அமர்ந்து உணவு உட்கொள்ளமுடியும். மாலை 6 மணிக்குப் பிறகு வீட்டு விநியோகம் எப்போதும் அனுமதிக்கப்படுகிறது, ஆனால் barக்கு எடுத்துச் செல்லும் சேவை தடைசெய்யப்பட்டுள்ளது. இது பொது இடங்களில் கூட்டங்களைத் தவிர்ப்பதற்கான ஒரு தீர்க்கமான நடவடிக்கையாக உள்ளது.
வெள்ளை நிறப் பகுதி
1 அல்லது 1க்கு குறைவான Rt, குறைத்த ஆபத்து நிலை, தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு, 100,000 மக்கள்த் தொகையில் 50 க்கும் குறைவான புதிய தொற்றுக்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கைகள் உள்ள பிராந்தியங்கள் வெள்ளை நிறப் பகுதியாக மாற்றமடைந்து அனைத்தும் திறக்கப்படும்.
16 சனவரி முதல் 5 மார்ச் வரையிலான கால அட்டவணை:
- சனவரி 16 : அமுலுக்கு வரும் புதிய ஆணை.
- சனவரி 17 : நாடளாவிய நிறப் பிரிவு.
- பிப்ரவரி 15 : மஞ்சள் நிறப் பகுதிகளில் பிராந்தியங்களுக்கு இடையிலான நகர்வுகளுக்கு அனுமதி.
- மார்ச் 5 : ஆணை முடிவடைகிறது.
- ஏப்ரல் 30 : அவசரகால நிலை முடிவடைகிறது, ஆனால் தடுப்பூசி பிரச்சாரம் நடந்து கொண்டிருப்பதால் அதை மீண்டும் நீட்டிக்க வேண்டுமா என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும்.