மார்ச் 6 முதல் ஏப்ரல் 6 வரையிலான புதிய ஆணை
இத்தாலியின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள பிரதமர் Mario Draghi புதிய ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். இந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மார்ச் 6 முதல் ஏப்ரல் 6 வரை நடைமுறையில் இருக்கும்.
இந்த புதிய ஆணையில் முகக்கவசம் அணிவது, நாடளாவிய நிறப் பிரிவு மற்றும் நகர்வுகள், சுற்றுலாப் பயணங்களுக்கான தடை போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும், முந்தைய ஆணையில் ஒவ்வொரு நிற பிரிவுகளுக்கும் விதிக்கப்பட்ட விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும்
முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி
நாடளாவிய ரீதியில் எப்போதும் சுவாச தற்பாதுகாப்பு சாதனங்களை வைத்திருப்பது கட்டாயமாகும், அத்துடன் தனியார் வீடுகளைத் தவிர மற்ற உட்புற இடங்களிலும், எல்லா வெளிப்புற இடங்களிலும் அவற்றை அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய கடமையும் உள்ளது.
ஊரடங்கு உத்தரவு
இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நிரூபிக்கப்பட்ட வேலைத் தேவைகள், அவசியமான சூழ்நிலைகள் அல்லது சுகாதார காரணங்களுக்காக மட்டுமே நகர்வுகள் அனுமதிக்கப்படுகிறது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும், வேலை, படிப்பு, சுகாதார காரணங்கள், அவசியமான சூழ்நிலைகளுக்கு மட்டுமே பொது அல்லது தனியார் போக்குவரத்துகளை பயன்படுத்துமாறு கடுமையாக பரிந்துரைக்கப்படுகிறது. வெள்ளை மண்டலத்தில், ஊரடங்கு உத்தரவு தாமதமாகும்.
நிறப் பிரிவு
வெள்ளை, மஞ்சள், செம்மஞ்சள் மற்றும் சிவப்பு நிறப் பிரிவுகள் இருக்கும்.
சிவப்பு: Molise, Basilicata
செம்மஞ்சள்: Lombardia, Piemonte, Marche, Abruzzo, Toscana, Campania, Emilia Romagna, Umbria, Trento, Bolzano
மஞ்சள்: Valle d’Aosta, Veneto, Liguria, Friuli Venezia Giulia, Lazio, Puglia, Sicilia, Calabria
வெள்ளை: Sardegna
வெள்ளை நிறப் பிரிவு மூன்று வாரங்களுக்கு நேர்மறையான குறிகாட்டிகள், தீவிர சிகிச்சை பிரிவின் அதிக திறன் மற்றும் 1 லட்சம் மக்கள் தொகையில் 50 க்கும் குறைவான தொற்றுக்குள்ளானவர்கள் இருக்கும் பிராந்தியங்கள் வெள்ளை நிறமாக மாற்றமடையும்.
பிராந்தியங்களுக்கு இடையிலான நகர்வுகள்
வெள்ளை அல்லது மஞ்சள் நிற பிரதேசங்களில் இருந்தாலும் பிராந்தியங்களுக்கு இடையிலான நகர்வுகள் 27 மார்ச் வரை தடை செய்யப்பட்டுள்ளது. சுய சான்றிதழ் படிவத்துடன், வேலை, சுகாதாரம் மற்றும் அவசர காரணங்களுக்காக மட்டுமே வெளியே செல்ல முடியும். இரண்டாவது வீடுகளுக்குச் செல்லலாம் (ஆனால் அவை மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிற பிராந்தியங்களுக்குள் இருந்தால் மட்டுமே).
பாடசாலைகள்
சிவப்பு நிற பிரதேசங்களில் மட்டும் பாடசாலைகள் மூடப்பட்டு 100% இணையவழி கல்விமுறை மேற்றக்கொள்ளப்படும். ஏனைய நிற பிரதேசங்களில், தொற்றுநோய்ப் பரவலின் தரவுகள் மற்றும் சூழ்நிலைகளைப் பொறுத்து ஒவ்வொரு நகராட்சி ஆளுநர்கள் அல்லது பிராந்தியத் தலைவர்கள் தங்கள் நகரங்களில் பாடசாலைகளை மூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள்.
உறவினர்களிடம் செல்வது சிவப்பு நிற பிரதேசங்களைத் தவிர, பிற நிற பகுதிகளில் இருவர் மட்டும் ஒரு நாளுக்கு ஒரு தடவை உறவினர் அல்லது நண்பர்களிடம் செல்லலாம்.
சிகை அலங்கார நிலையங்கள்
சிவப்பு நிற பிரதேசங்களில் மட்டும் சிகை அலங்கார நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்.