அரசாங்க ஊடரங்குச் சட்டங்களுக்கு மேலாக மாநில ஆளுநர்களின் இறுக்கமான நெறிமுறைகள்.

மேல் இடது பக்கத்தில் இருந்து மாநில ஆளுநர்கள் வரிசையாக: Fontana (Lombardia), Zaia (Veneto), Bonaccini (Emilia-Romagna), Kompatscher (Alto Adige), De Luca (Campania), Musumeci (SIcilia)

பிரதம அமைச்சர் Giuseppe Conte அறிவித்த புதிய நெறிமுறைகளுக்கு மேலாக சில மாநிலங்கள் இறுக்கமான நெறிமுறைகளை அமுல்படுத்திருக்கின்றார்கள்.

அரசாங்கம் கொண்டு வந்த நடவடிக்கைகள் போதுமானவை இல்லை என்று கடும் விமர்சனங்களை முன்வைத்து ஆளுநர்கள் இந்த மாநிலச் சட்டங்களை அமுல்படுத்தியுள்ளார்கள்.

வடக்கில் இருக்கும் Alto-Adigeயில் இருந்து தெற்கில் உள்ள Sicilia வரை கொரோனாவைரசை எதிர்கொள்வதற்கு சில மாநில ஆளுநர்கள் நடைமுறைக்கு கொண்டு வந்த நெறிமுறைகளை கீழே பார்க்கலாம்.

Alto adige

Alto Aldigeயில் பொது இடங்களில் உள்ள இருக்கைகளில் (panchine) இருப்பதற்கு தடை விதிக்கப்பட்டு மேலும் வேலைக்குச் செல்பவர்கள் மட்டுமே மிதிவண்டி பாதைகளைப் (Poste ciclabili) பயன்படுத்தலாம் என உறுதியாகிறது. அரசாங்கத்தின் வரையறைக்குள் முதல் அடங்காத அங்காடிகள் (supermercati) மற்றும் வணிகக் கடைகள் இனி ஞாயிற்றுக்கிழமையில் முழுமையாக மூடப்படவேண்டும். மீதி வேலை நாட்களில், மாலை ஏழு மணிக்கு அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும்.

மற்றவர்களிடமிருந்து 3 மீட்டர் தூரத்தைக் கடைப்பிடித்து விட்டிற்கு கீழே நின்று உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

Lombardia

Lombardia மாநில ஆளுநர் Attilio Fontana, பொது இடங்களில் அல்லது பூங்காக்களில் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தும் முகமாக வெளிப்புறங்களில் உடற்பயிற்சி செய்வதை தடை செய்துள்ளார். வீட்டிற்கு கீழ் நின்று தனிமையில் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். அனைத்து கட்டிடத்தளங்களும் (cantieri) தொழில்முறை அலுவலகங்களும் (studi professionali) மூடப்பட்டுள்ளன.

Piemonte

Fontanaவின் அதே முடிவை Piemonte மாநில ஆளுநர் Alberto Cirioவும் எடுத்துள்ளார். “எண்கள் குடிமக்களின் ஆரோக்யத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு தீவிர முயற்சி இது” என்று ஆளுநர் கூறியுள்ளார். Lombardiaயைப் போலவே பாதுகாப்பு இடைவெளியை கடைபிடிக்க முடியாத வெளிப்புற சந்தைகளும் (mercati all’aperto) தடைசெய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிய இல்லாத பொது சேவை வழங்கும் அலுவலர்களும் மூடப்பட்டன. கட்டட வேலைத்தளங்களும் மூடப்பட்டுள்ளன.

Veneto

Venetoவிலும் ஆளுநர் Luca Zaia சிறப்பு மாநிலச் சட்டங்கள் விதித்துள்ளார். 3 ஏப்ரல் வரை ஞாயிறுகளில் மற்றும் விடுமுறை நாட்களில் உணவு அங்காடிகள் (supermercati e negozi alimentari) மூடுவதை தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாயுடன் நடப்பதற்கு மற்ற நபர்களிடம் இருந்து 200 மீட்டர் இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Emilia-Romagna
Emilia-Romagna மாநிலத்திலும் ஆளுநர் Stefano Bonaccini மேலும் ஒரு இறுக்கமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இன்றைய நிலவரப்படி, பல்பொருள் அங்காடிகள் மற்றும் உணவுக் கடைகள் (supermercati e negozi alimentari) ஞாயிற்றுக்கிழமையில் மூடப்படும். அதே நேரத்தில் சந்தைகள் அனைத்தும் (mercati e mercatini) ரத்து செய்யப்பட்டுள்ளன. “தொற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள Rimini மாகாணத்தில் உற்பத்தி நடவடிக்கைகளைத் தடுக்க நான் முடிவு செய்துள்ளேன். மற்ற மாகாணங்களிலும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இறந்தோரின் எண்ணிக்கைகளை சிந்திக்கும் பொழுது மூச்சு திணறுவது போல் இருக்கின்றது” என்று ஆளுநர் Bonaccini விளக்குகிறார்.

Campania
Campania மாநிலத்தில், “வீட்டில் இருங்கள்” என்ற ஆணையின் மீறலை எதிர்கொள்ள, ஆளுநர் Vincenzo De Luca “பட்டமளிப்பு விழா அல்லது வேறு எவ்வித விழாக்கள்” ஏற்பாடு செய்ய விரும்புவோருக்கு கடுமையாக தடைவிதித்துள்ளார். உடற்பயிற்சி செய்வதற்கும் முழுத் தடை விதித்துள்ளார். மேலும் Angri நகராட்சியில் கிழமையில் ஒரு தடவை மட்டுமே அகர வரிசையின் படி (குடும்பப் பெயரின் ஆரம்ப எழுத்தின் படி) வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் செல்லலாம் என ஆணையிடப்பட்டுள்ளது.

Calabria
Calabria மாநிலத்தில் ஆளுநர் Jole Santelli தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். ஏப்ரல் 3, 2020 வரை, மாநிலத்திற்கு உள்நுழைவதும் அதை விட்டு வெளியேறுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. நிரூபிக்கப்பட்ட வேலைத் தேவைகள் மற்றும் சுகாதாரக் காரணங்களுக்கு மட்டுமே நகர்வுகள் அனுமதிக்கப்படுகின்றன. இந்த நெறிமுறைகளை மீறுபவர்கள், தற்சமயம் மிகத்தீவிரமாக பரவி வரும் தொற்றுநோய் பாதிப்பை கருத்தில் கொண்டு, உடனடியாக 14 நாட்கள் தனிமையில் இருக்கத் நிர்ப்பந்திக்கப் படுவார்கள்.

Sicilia

Sicilia மாநிலமும் தனிமைப்படுத்தல் வழியை தெரிவு செய்துள்ளது. Messina படகுத்துறை மூலம் வரும் பயணிகள் பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றார்கள். அவசர அத்தியாவசிய தேவைகளைத் தவிர மீதி விமானச் சேவைகள் Catania விமான நிலையத்தில் வலுவாக குறைக்கப்பட்டுள்ளன.

ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டுமே உணவுப் பொருட்களை வாங்க வேண்டும் என்று ஆளுநர் Nello Musumeci உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பல்பொருள் அங்காடிகள் (Supermercati e negozi alimentari) ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட வேண்டும். வெளிப்புறத்தில் உடற்பயிற்சிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இறுதியாக, நோய்த்தொற்றுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் Sicilia பிராந்தியத்தின் போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

உங்கள் கவனத்திற்கு