இத்தாலியின் வைரசால் தாக்கப்பட்ட சுகாதார பணியாளர்களின் வீதாசாரம் சீனாவை விட இரண்டு மடங்கிற்கும் அதிகம்.
இத்தாலி தேசிய மருத்துவ அமைப்பின் (Federazione nazionale degli Ordini dei medici (- Fnomceo) எண்ணிக்கைப்படி 23 மார்ச் வரை 24 சுகாதார பணியாளர்கள் வைரசின் தாக்கத்தால் உயரிழந்துள்ளார்கள் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி உயர் சுகாதார நிறுவனம் (ISS) தரவுகளின்படி, தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து 4,824 சுகாதாரப் பணியாளர்கள் கொரோனாவைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீதாசாரத்தில் பார்த்தால் இவர்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்ட மக்களின் மொத்த தொகையில் 9% வீதம் ஆகும். சீனாவின் பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களின் வீதம் 3,8% ஆகும். அவர்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது இத்தாலியின் வீதாசாரம் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உள்ளது.
கொரோனாவைரசால் பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கையின் தரவு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர்களுக்கு பரிசோதனைகள் விரிவுப்படுத்தப்பட வேண்டும் என்றும் சுகாதார நிறுவனம் Gimbe கேட்டுள்ளது. அதற்கு மேலாக இந்த நெருக்கடியான சூழ்நிலையில் முன் நின்று ஈடுபடுபவர்களுக்கு தற்பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கையை விடுத்துள்ளது.
மேலதிக குற்றச் சாட்டுக்களை Magenta மருத்துவமனையின் மருத்துவ செயல்பாட்டு பிரிவின் நிர்வாகி Dott. Nicola Mumoli முன்வைத்து இருக்கிறார்.
Corriere della Seraவிற்கு எழுதிய கடிதத்தில் வைரசால் பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு தகுந்த பரிசோதனை மறுக்கப்பட்டுவருக்கிறது என அவரது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த வாரங்களாக தன்னுடன் பணிபுரிபவர்களின் முயற்சியால் 130ற்கும் மேலான வைரசால் பாதிக்கப்பட்டோர்க்கு சிகிச்சையளித்து வருகிறார்கள். சில நாட்களாகவே தன்னோடு இயங்கிக்கொண்டு இருந்த ஒரு சக பணியாளர் COVID-19 நோயின் அறிகுறிகளை காட்டிக்கொண்டு இருந்தார். பலமுறை கேட்டும் நோயிக்கான பரிசோதனை மறுக்கப்பட்டுள்ளது. அனால், எந்த வித அறிகுறி இல்லாத நடிகர்கள், அரசியல்வாதிகள், கால்பந்தாட்ட வீரர்களுக்கு முன்னுரிமையளித்து பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
முன்னின்று வேலை செய்யும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உடனடியாக பரிசோதனைகள் அளித்து சரியான நேரத்தில் சிகிச்சை கொடுக்க வேண்டுமென கோரிக்கையை முன்வைத்தார் (முழுக் கடிதம் படிப்பதற்கு).