புதிய ஆணையில் கையெழுத்திட்டுள்ளது இத்தாலி அரசாங்கம்
இத்தாலி பிரதமர் Mario Draghi புதிய ஆணையில் கையெழுத்திட்டார். எந்த வணிக நடவடிக்கைகளுக்கு Green pass rafforzato (தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள், நோய்த்தொற்றிலிருந்து குணமாகியவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் சான்றிதழ்) அல்லது Green pass base (தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள், நோய்த்தொற்றிலிருந்து குணமாகியவர்கள், பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்) தேவைப்படும் என அதில் குறிப்பிடப்படுகின்றது.
Green pass தேவையில்லாத இடங்கள்:
- பல்பொருள் அங்காடிகள், மளிகைக் கடைகள், உணவு மற்றும் பானங்கள் விற்பனை செய்யும் பிற கடைகள் (இவ் இடங்களில் நுகர்வு அனுமதிக்கப்படாது)
- உறைந்த உணவுக் கடைகள்
- செல்லப்பிராணி உணவு வர்த்தகக் கடைகள்
- சுகாதாரப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்
- கண்பார்வை நிபுணர்கள்
- மருந்தகங்கள்
- எரிபொருள் வர்த்தக நிலையங்கள்
- எரிவாயு நிலயங்கள்
- காவல் துறை அலுவலகங்கள்
- புகார்கள் சமர்ப்பிப்பதற்காக நீதித்துறை அலுவலகங்கள்
- வெளிப்புற நடவடிக்கைகள் அனைத்திலும் (சந்தைகள், எரிவாயு நிலையங்கள்
புத்தகக் கடைகள், விளையாட்டுக் கடைகள், சலவைகள், புகையிலைக் கடைகள் (tabacchi), பொது அலுவலகச் சேவைகள் ஆகியவற்றில் Green pass base தேவைப்படும். மேலும், ஓய்வூதியத்தைப் பெற தபால் நிலையத்திற்குச் செல்வதற்கும் வங்கிகளுக்கும் Green pass base அவசியம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.