7ம் நாளாக (22/02/2022) தொடரும் அறவழிப்போராட்டம்
கடந்த 16/02/2022 மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் பிரித்தானியாவில் இருந்து ஆரம்பமானது. நேற்று (22/02/2022) இவ்வறவழிப்போராட்டம் கொட்டும் மழையிலும் கடுமையான மேடுகளிலும் பயணித்தவாறு பெல்சியத்தின் தலைநகரம் Brussel மாநகரத்தின் ஊடாக Wavre மாநகரத்தில் இருந்து தொடர்ந்தது.
சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை, தமிழீழமே தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு என்பதனை பெல்சிய வெளி நாட்டு அமைச்சிடம் மாநகரசபைகள் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை அடங்கிய மனு ஒப்படைக்கப்பட்டு நம்பிக்கை வாக்குறுதிகளும் பெறப்பட்டன. அதே வேளையில் பெல்சிய ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து எமது கோரிக்கைகளை வலுப்பெற குரல் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
“ஒரு போரின் வெற்றியைத் தீர்மானிப்பது ஆட்பலமோ ஆயுதப் பலமோ அல்ல. அசைக்க முடியாத மனவுறுதியும், வீரமும் வீடுதலைப் பற்றுமே வெற்றியை நிர்ணயிக்கும் குணாம்சங்கள்” – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.