ஐநா நோக்கி பயணிக்கும் மனிதநேயச் செயற்பாட்டாளர்களின் வீரம் செறிந்த உணர்வுகள்
கடந்த 16/02/2022 அன்று பிரித்தானியப் பிரதமர் இல்லத்தின் முன்றலில் இருந்து ஆரம்பித்த ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம், கொட்டும் மழையிற்கும் கடும் குளிருக்கு இடையில் தொடர்ச்சியாக பயணித்து வருகின்றது.
சிறிலங்காப் பேரினவாத அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும், நெஞ்சில் வீரத்தைப் பாய்த்து, பல சவால்களைத் தாண்டி உறுதியுடன் பயணிக்கும் எமது மனிதநேயச் செயற்பாட்டாளர்களின் கருத்துக்களையும் வீரம் செறிந்த உணர்வுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.