தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு இத்தாலியில் நடைபெற்ற மரம் நடுகை
நேற்று, 18 மே, தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு, சிறீலங்கா அரசால் ஈழத்தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் இன அழிப்பினால் கொல்லப்பட்டு வரும் தமிழ் மக்கள் நினைவாக இத்தாலியில் Palermo மாற்று Valdilana நகரங்களில் மரம் நடப்பட்டு தமிழின அழிப்பு நினைவு குறியீட்டுத் தட்டும் வைக்கப்பட்டது.
பலெர்மோ நகரில், கடந்த வருடம் 24 செப்டம்பர், கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை அடுத்து, இந்த வருடம் தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு, Giardino dei Giusti எனும் பூங்காவில் மரம் நாட்டப்பட்டது. இந் நிகழ்வில் பலெர்மோ நகராட்சியின் ஆளுநர் Leoluca Orlando மற்றும் உறுப்பினர்கள். தமிழ்த் தேசிய கட்டமைப்புகளின் உறுப்பினர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திலீபன் தமிழ்ச் சோலையில் வணக்க நிகழ்வும் நடைபெற்றது.
பியெல்லா நகரில் Piazza XXV Aprile எனும் இடத்தில் மரம் நடுகையும் அதனைத் தொடர்ந்து வணக்க நிகழ்வும் நடைபெற்றது. Valdilana ஆளுநர் Mario Carli மற்றும் தமிழ்த் தேசிய கட்டமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் Valdilana வாழ் தமிழ் மக்களின் பங்கேற்புடன் இந் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை தான் என்பதை உத்தியோக பூர்வமாக உறுதிப்படடுத்திய இவ் இரு நகரங்களிலும், மரம் நடப்பட்டு எதிர்வரும் காலங்களிலும் ஈழத்தமிழர்களுடன் கரம்கோர்த்து தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டிய போராட்டத்தில் ஒன்றிணைந்து செயல்படுவதாக உறுதி எடுக்கப்பட்டது.
Palermo
Valdilana