இத்தாலி மேற்பிராந்தியத்தில் 2022ம் ஆண்டு தேசிய மாவீரர் தினம்
இத்தாலி மேற்பிராந்தியத்தில் Reggio Emilia நகரில் 27/11/22 அன்று தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் எழுச்சியுடன் இடம்பெற்றன.
முதலில் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டதை தொடர்ந்து இத்தாலிய மற்றும் தமிழீழ தேசியக்கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டது. பின் 2008ம் ஆண்டிற்க்கான தமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் தின உரையின் சுருக்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ மாவீரர்நாள் அறிக்கை ஒலிபரப்பப்பட்டது. அடுத்து அகவணக்கத்தை தொடர்ந்து துயிலும் இல்லப்பாடல் ஒலிக்க மாவீரர் குடும்பத்தினர் மலர் வணக்கம் செலுத்தினர். பின் பொதுமக்களின் மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றது.
அடுத்து கலைநிகழ்ச்சிகள் மற்றும் இத்தாலி மேற்பிராந்திய கட்டமைப்பு இளையோர்களுடன் இணைந்து மேற்கொண்ட அரசியல் வேலைத்திட்டங்கள் தொடர்பான தொகுப்புரை மற்றும் Germany நாட்டிலிருந்து வருகை தந்த தமிழ் தேசிய செயற்பாட்டளரின் சிறப்புரை ஆகியவை இடம்பெற்றன.
பின்னர் திலீபன் தமிழ் சோலை மாணவர்கள் பங்கேற்ற பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது .
தொடர்ந்து கூடியிருந்த அனைவரும் ஒன்றிணைந்து உறுதி மொழி எடுத்துக் கொண்டனர் இறுதியாக தேசியக் கொடி இறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிறைவுற்றது.
இவ்வாண்டும் பல இடர்பாடுகள் மத்தியிலும் Reggio Emilia பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் Reggio Emilia மற்றும் Bologna, Genova, Torino, Biella போன்ற தூரப்பிரதேசங்களில் இருந்து பெரும் அளவில் மக்கள் உணர்வுடன் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.