எம்மினத்தின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14′ ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குரல்கள் குருதியால் எழுதப்பட்டுள்ளது.
புலத்தில் வாழும் ஈழத்தமிழராகிய நாமும் இத்தாலி நாட்டில் தமிழரின் அடையாளம் இனவழிப்பு உட்பட பல விடயங்களில் பட்டறிவு பெற்ற தமிழ் இளையோரின் அர்ப்பணிப்பாலும் விடாமுயற்சியினாலும் தற்போதைய சூழலில் உச்ச பயன்பாட்டில் உள்ள சமூகவலைத்தளங்களூடாக பல்வேறு வகையான தேசியம் சார்ந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதும் அனைவரும் அறிந்ததே அந்தவகையில் இத்தாலி நாட்டில் வாழும் ஈழத்தமிழ் சிறார்கள் செஞ்சோலைப் படுகொலை சார்ந்து வெளிப்படுத்திய ஆக்கங்களை இங்கு காணலாம்.
செஞ்சோலைப் படுகொலைகள்
செஞ்சோலை இளம் வளர் பூக்களே
செவ்விரத்தம் சிந்திய இந்நாளிலே
செம்மையாய் பதிந்தது எமதுள்ளங்களில்
செய்வதறியாது தவிக்கிறோம் நாமிங்கு
இன அழிப்பின் சிங்கள சிகரமே
இளந் தமிழர் இனம் அழிக்கவே
ஏதும் அறியாப் பாலகர்களை
ஏன் இரத்தம் குடித்து சென்றாய்
அறுபத்தி நான்கு இன்னுயிர்களும்
ஆயுதம் எந்தவில்லையே உனக்கு எதிராய்
அடுக்கடுக்கான உன் தோல்வி மறைக்க
அணையிட்டதோ அதிகார வெறி அரசு
ஆண்டுகள் பதின்நான்கு ஆகினவே
அரும் நீதி எமக்கு மட்டும் இல்லையா
அனைத்து உயிர்களும் ஒன்றுதானே
அகிலமே ஏன் மௌனம் காக்கிறாய்