இத்தாலி மற்றும் பின்லாந்து வாழ் தமிழ்மக்களின் பங்களிப்பில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர், உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு – வவுனியா
மாவீரர் பெற்றோர், உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு – வவுனியா வவுனியா மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிக்கும் நிகழ்வு வவுனியா மாநகரசபையின் கலாச்சார மண்டபத்தில் 14.11.2026 காலை 10.30 மணிக்கு ஆரம்பமானது. முன்னதாக ஏ 9 வீதியிலிருந்து மாவீரரின் பொது உருவப்படம் தாங்கியவாறு மங்களவாத்தியத்துடன் மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் அழைத்துவரப்பட்டு மண்டபத்தில் பொதுச்சுடர் ஏற்றலுடன் திருவுருப்படத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, சமநேரத்தில் மண்டபத்தில் உள்ள திருவுருவப் படங்களுக்கான சுடர்களை பெற்றோரால் ஏற்றிவைக்கப்பட்டது.
அகவணக்கத்தை தொடர்ந்து வரவேற்பு நடனம், நினைவுரைகள் கலைநிகழ்வுகள் நடைபெற்றது. இதில் நினைவுரையினை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கெள்கைபரப்பு செயலாளர் நடராஜர் காண்டீபன் ஆற்றினர்.நிகழ்வில் மாவீரரின் பெற்றோர், உரித்துடையோர், முன்னாள் போராளிகள் , பொதுமக்கள் எனப்பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பேரெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் பெற்றோர், உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்விற்கு இத்தாலி மற்றும் பின்லாந்து வாழ் தமிழ்மக்கள் தமது பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.













