Genova வாழ் மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
டிசம்பர் 3 வியாழக்கிழமை முதல், Genova நகராட்சியில் வசிப்பவர்கள் COVID-19 அவசரநிலை காரணமாக உணவு மற்றும் அடிப்படை தேவைகளை வாங்குவதில் சிரமத்தில் உள்ளவர்கள், குடும்ப வருமானத்தில் கணிசமான இழப்பு/குறைப்பை சந்தித்தவர்கள் மற்றும் தகுந்த ISEE உள்ளவர்கள், அல்லது 31.12.2020க்குள் 20.000 யூரோக்களுக்கும் குறைவாகவோ அல்லது சமமாகவோ ISEE சான்றிதழைப் பெற முடியும் என்று நம்புபவர்கள், Bonus alimentari எனும் சலுகைக்கு விண்ணப்பிக்க முடியும். ISEE இல்லையென்றால் அல்லது அது தற்போதைய நிலைமைக்கு ஒத்துப்போகவில்லை என்றால், புதிய சான்றிதழை சமர்ப்பிக்க நியாயமான காலக்கெடு வழங்கப்படும்.
அனைவரின் கவனத்திற்கு!
இதற்கான விண்ணப்பத்தினை டிசம்பர் 3 காலை 8 மணி முதல் பெற முடியும். டிசம்பர் 12 நல்லிரவு 12 மணி வரை விண்ணப்பிக்க முடியும். Genova நகராட்சியின் இணையத்தளம் ஊடாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தன்னிச்சையாக விண்ணப்பிக்க சிரமப்படுகின்றவர்களுக்கு, டிசம்பர் 3 முதல் 11 வரை காலை 9.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை 800583940 எனும் இலக்கத்தை தொடர்புகொண்டு விண்ணப்பிப்பதற்கான உதவியினை பெற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொரு நகர அலுவலகங்களிலும், மூன்றாம் துறை அமைப்புக்களின் ஆதரவோடும், இணையத்தளத்தில் விண்ணப்பிக்க முடியும். தளத்தில் வெளியிடப்பட்ட அட்டவணையில் சுட்டிக்காட்டப்பட்ட எண்களை அழைத்து டிசம்பர் 4 அன்று காலை 9 மணி முதல் நியமனம் செய்ய வேண்டும். இதற்கன நியமனங்கள் டிசம்பர் 7 காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை நியமிக்கப்படும். 11 டிசம்பர் 2020 அன்று மாலை 5.30 மணிக்குப் பிறகும் விடுமுறை மற்றும் விடுமுறைக்கு முந்தைய நாட்களிலும் நியமனங்கள் செய்ய முடியாது.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு விண்ணப்பம் மட்டும் அனுப்ப முடியும். Pensione di cittadinanza, Reddito di cittadinanza, Cassa integrazione, ஓய்வூதியம் பெறுபவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஓய்வூதியதாரர்களாக இருந்தால், விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியாது.