தமிழர்களின் பண்பாட்டு விழாக்களின் ஒன்றான ஆடிப்பெருவிழா 2026
ஆடி விதை தேடி விதைஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்ஆடி ஆவணி ஆன புரட்டாதிகாடி தோய்த்த கனபனங் காயத்தைத்தேடித் தேடித் தினமும் புசிப்பவர்… எனும் பழைய பாடலை நினைவுபடுத்தி ஆடி மாதம் ஆனந்தமாகக் கொண்டாடிய இந்நாளினை வரவேற்று (19/07/2026) ஞாயிற்றுக்கிழமை பி.ப 15:00மணிக்கு LARGO AUGUSTO MERLO QUEZZI எனும் தேவாலயத்தின் மேற்பகுதியில் உள்ள விளையாட்டுத்திடலில் அகவணக்கத்துடன் ஆரம்பித்து, மங்கல விளக்கேற்றப்பட்டது.
தொடர்ந்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இணைந்து ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை பாடல் பாடப்பட்டு, மைதான விளையாட்டுகள் ஆரம்பமானது. சிறுவர் முதல் பெற்றோர்கள் வரையிலான அனைத்து விளையாட்டுகளும் விறு விறுப்பாகவும் ஒருவருக்கு ஒருவர் தளராத வேகத்துடன் இரண்டு இல்லங்களும் விளையாடி மகிழ்ந்தனர்.சங்கிலியன் சிவப்பு இல்லமாகவும் எல்லாளன் மஞ்சள் இல்லமாகவும் உளநெகிழ்ந்து விளையாடி இரண்டு இல்லம் சமநிலையில் புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.இரண்டு இல்லங்களுக்கும் வாழ்த்துகள்.







































