இத்தாலி பலெர்மோ நகரில் நடைபெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த வெற்றி கிண்ணப் போட்டிகள் 2026
தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அனுசரணையுடன் பலெர்மோ ஈழத்தமிழர் விளையாட்டுச் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் கழகங்களுக்கு இடையிலான உதை பந்தாட்டப் போட்டி கடந்த 05-07- 2026 ஞாயிற்றுக்கிழமை தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகி முதல் மாவீரர் சங்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கும் அன்றே கரும்புலிகள் நினைவு நாளாதலால் ஒன்றாக வீரவணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து கழகங்களுக்கு இடையிலான உதை பந்தாட்ட போட்டிகள் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து 12-07- 2026 ஞாயிற்றுக்கிழமை அரை இறுதிப் போட்டிகளும் சிறப்பு போட்டிகளாக சிறுவர்களுக்கான சங்கிலியன், பண்டாரவன்னியன் இரண்டு அணிகளுக்குமான உதை பந்தாட்ட போட்டியும், பெண்களுக்கான கயிறு இழுத்தல் ஆண்களுக்கான கயிறு இழுத்தல் ஆண்களுக்கான 40 வயதுக்கு மேற்பட்ட உதை பந்தாட்ட போட்டி பெண்களுக்கான சங்கீத கதிரை என போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது. மாலை உதை பந்தாட்ட இறுதிப் போட்டிகள் நடைபெற்று தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வுகள் நிறைவு பெற்று தேசியக்கொடி இறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் உறுதிமொழி எடுக்கப்பட்டு போட்டிகள் இனிதே நிறைவு பெற்றது.
இப்போட்டியில் மாவீரர் குடும்பங்கள் திலீபன் தமிழ் சோலை ஆசிரியர்கள் பலெர்மோ வாழ் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து சிறப்பித்து விளையாட்டு துறை மூலம் நமது எழுச்சியையும், ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.















































