இத்தாலி வல்திலானா நகரசபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற பல்லின மக்களின் நிகழ்வில் ஈழத்தமிழர்கள்

வழமை போன்று இந்த ஆண்டும் 04/07/2026 வல்திலானா நகரசபையின் ஏற்பாட்டில் பல்லின மக்களை ஒன்றிணைத்து அமைதியை நெய்தல்: பொறுப்பின் பாதையில் சமூகங்களின் கதைகள் எனும் தலைப்பில் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இன்றைய உலகில் போர்கள், மனிதாபிமான நெருக்கடிகள் மற்றும் சமூகப் பிளவுகள் அதிகரித்து வரும் நிலையில், அமைதி என்பது வெறும் கனவாக அல்லாமல், ஒவ்வொரு சமூகமும் தினசரி பொறுப்புணர்வுடன் இணைந்து உருவாக்க வேண்டிய ஒரு பொதுப் பயணமாகும். இந்த கருத்தரங்கம், சர்வதேச சூழ்நிலைகளையும் உள்ளூர் சமூகங்களின் அனுபவங்களையும் இணைத்து, உரையாடல், ஒற்றுமை மற்றும் செயற்பாட்டின் மூலம் அமைதியை எவ்வாறு கட்டியெழுப்பலாம் என்பதைப் பற்றிச் சிந்திக்கவும். பல்வேறு சமூகங்களின் கதைகள் மற்றும் அனுபவங்கள், “அமைதியை நெய்தல்” என்பது அனைவரும் இணைந்து செய்யும் ஒரு பொதுப் பொறுப்பு என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

இந்நிகழ்வில் ஈழத்தமிழர்களாக நாமும் எமது இன அடையாளங்களுடன் கலந்து கொண்டு தமிழின அழிப்பிற்கான நீதி கோரலையும் செய்ய வேண்டியது எங்கள் ஒவ்வொருவரின் கடமையாக ஏற்றுக்கொண்டு காலை 8.45 மணிக்கு (mercato coperto) ஆரம்பமாகி 11.00 மணிக்கு ( palazzetto) முடிவடைந்த சமாதானத்திற்கான நடைபயண ஊர்வலத்தில் பங்கேற்று 17.00 மணிக்கு நடைபெற்ற மகாநாட்டிலும் கலந்துகொண்டு 19,00 மணிக்கு நடைபெற்ற பல்லின மக்களின் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டதுடன் தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் காட்சிப்படுத்தலையும், துண்டுப்பிரசுர விநியோகமும் எமது இளையோர்களால் முன்னெடுக்கப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. நகரசபை உறுப்பினர்களால் ஈழத்தமிழர்கள் நகரசபையின் செயற்பாடுகளுக்கு தொடர்ச்சியாக உறுதுணையாக இருப்பதோடு , கொடுக்கப்படும் பணிகளை மிகவும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் செய்பவர்கள் என்று பாராட்டியிருந்தனர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இத்தாலியில் தேசிய அளவில் சமாதான முயற்சிகளை மேற்கொள்பவரான திரு Flavio Lotti இத்தாலியில் தேசிய அளவில் பாடசாலைகள் மட்டத்தில் தமிழர் வரலாற்றையும் தமிழின அழிப்பையும் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளை செய்வதாக கூறிய செய்தி மிகவும் காத்திரமானதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கவனத்திற்கு