தமிழால் இணைவோம்
அனைவருக்கும் வணக்கம்!மொழி என்பது பண்பாட்டின் பேழை. தாய்மொழி வழியேதான் ஒரு தலைமுறையின் பழக்கவழக்கங்கள்,இலக்கியங்கள் மற்றும் விழுமியங்கள் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகின்றன. தாய்மொழியை மறப்பது என்பது நமது பாரம்பரிய வேர்களை இழப்பதற்குச் சமமாகும். அந்த வகையில் தாய்மொழிக் கல்வியினை கற்று ஆளுமை உள்ள சிறார்களாகத் திகழ வேண்டும் என்ற நல் எண்ணத்துடன் இன்று ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலைச் செயற்பாட்டாளர்கள் மாணவச் செல்வங்களின் இல்லம் சென்று பெற்றோர்களையும் பேரப்பிள்ளைகளின் தாத்தா,பாட்டியையும் சந்தித்து புதிய மாணவர்களை இணைக்கும் பணியினை மேற்கொண்டு ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையில் வந்து இணைத்து தாய்மொழிக்கல்வியினை கற்பதற்கான மாணவர் இணைப்புப் படிவம் கையளித்து வரவேற்றுக் கொண்டார்கள் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். அவற்றின் சில பதிவுகள்….
நன்றி
ஜெனோவா திலீபன்தமிழ்ச்சோலை












