இத்தாலி பியல்லா மற்றும் ஜெனோவா பிரதேசங்களில் இடம்பெற்ற தேசத்தின் புயல்களின் நினைவேந்தல் நிகழ்வு.
தமிழினத்தின் விடியலுக்காக தம்மை ஈகம் செய்த கரும்புலி மறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 05/07/2026 இத்தாலி பியல்லா மற்றும் ஜெனோவா பிரதேசங்களில் நடைபெற்றது. பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அகவணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் பேச்சு கவிதையும் ,எமது தேசிய உணர்வாளர்களின் நினைவு உரைகளும் இடம்பெற்றது. நிகழ்வின் நிறைவில் “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” பாடலைத் தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றது.
பியல்லா














ஜெனோவா









