இத்தாலி பலெர்மோ நகரத்தில் நடைபெற்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபனுடைய 39 ஆவது நினைவு வணக்க நிகழ்வு.

இந்திய வல்லாதிக்க அரசிற்கு எதிராக அகிம்சை வழியிலே போராடி தனது இன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலையில் 26/09/2026, சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் திலீபன் தமிழ்ச்சோலை மற்றும் மாலதி கலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், எம்தமிழ் உறவுகள் அனைவரும் வருகைதந்து, திலீபன் அவர்களின் வரலாறுகளை நெஞ்சிலே சுமந்தவண்ணம் அகவணக்கம், சுடர்வணக்கம், மலர்வணக்கம் என்பன செலுத்தப்பட்டு, உறுதிமொழி எடுக்கப்பட்டதோடு வணக்க நிகழ்வு நிறைவு பெற்றது.

உங்கள் கவனத்திற்கு