தமிழர் தாயகத்தில் கல்விப் பயணத்திற்கு கை கொடுத்த போலோனியா திலீபன் தமிழ்ச்சோலை

இத்தாலி போலோனியா திலீபன் தமிழ்ச்சோலையின் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, போலோனியா திலீபன் தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் பேராதரவுடன் தாயக உறவுகள் மீதான மாறாப் பற்றினைப் பறைசாற்றும் வகையில் ஒர் உன்னத அறப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உன்னதமான வணக்கத்துக்குரிய மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலே
‘தாயக நலன் திட்டத்தினூடாக’ தாயக மண் மீட்பிற்காகப் போராடிய மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு மாணவர்களின் கல்விப் பயணத்திற்குப் பேருதவியாக மிதியுந்துகள் வழங்கப்பட்டன.
புலம்பெயர் மண்ணில் முப்பதாண்டுகளாகத் தமிழ் வளர்க்கும் பணியோடு நின்றுவிடாமல், தாயகத்தில் பொருளாதாரப் பின்னடைவால் கல்வி கற்கச் சிரமப்படும் மாணவர்களின் எதிர்காலத்தையும் நினைவில் கொண்டு இப்பணி மேற்கொள்ளப்பட்டது. கல்விச் செல்வமே அழியாத செல்வம் என்பதை உணர்ந்து, தாயக மாணவர்களின் பள்ளிப் பயணத்தை எளிதாக்கும் இப் பணிக்குப் போலோனியா தமிழ்ச்சோலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஒன்றிணைந்து தங்களின் தாராளப் பங்களிப்பை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கவனத்திற்கு