இத்தாலி ஜெனோவா மாநகரில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் 2026
1982 ஆம் ஆண்டு நவம்பர் 27 முதற்களப் பலியான புலிவீரன் லெப். சங்கர் நினைவு நாளை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் நாளாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இப் புனிதநாளினை ஜெனோவா மாநகரில் அமைந்துள்ள தமிழர் இல்லத்தில் (27/11/2026) வெள்ளிக்கிழமை 13:00 மணிக்கு ஆரம்பமாகி 13:35 மணிக்கு தமிழீழத் தேசியக் கொடியேற்றலுடன் முதன்மைச் சுடரேற்றல், அகவணக்கம்,மலர் வணக்கம்,சுடர் வணக்கத்துடன் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வு புதிதாக அமையப் பெற்ற மாவீரர் துயிலும் இல்ல மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது.தேசியக் கொடி கையேந்தலுடன் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் இசைக்கப்பட்டு,
தமிழரின் தாகம் தமிழீழத் தாயம் என்னும் தமிழரின் தாரக மந்திரத்துடன் நினைவேந்தல் நிகழ்வு நிறைவு பெற்றது.அவற்றின் சில பதிவுகள்…..


































