Reggio Emilia: மீண்டும் ஓர் Buono spesa

டிசம்பர் 28 மாலை 4 மணி முதல் ஜனவரி 13 பிற்பகல் 1 மணி வரை, கொரோனாவைரசு அவசரநிலை காரணமாக பொருளாதார சிக்கலில் உள்ள குடும்பங்கள் உணவு செலவுகள் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு Buono spesa விண்ணப்பத்தை Reggio Emilia நகராட்சியில் சமர்ப்பிக்க முடியும்.

பணிநீக்கங்களில் உள்ள தொழிலாளர்கள் அல்லது Partita iva வைத்திருப்பவர்கள் அல்லது பிற அவசர உதவி நடவடிக்கைகளின் பயனாளிகளாக இருப்பவர்கள் மற்றும் 30 நவம்பர் 2020 அன்று வரை சொந்தப் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினரின் பெயரிலோ, 10.000 யூரோக்களுக்கு மேலாக நகரக்கூடிய சொத்துக்கள் (வங்கி மற்றும் அஞ்சல் வைப்பு, நிதிப் பத்திரங்கள் போன்றவை) வைத்திருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.

இவ் அவசர கட்டத்தில் பயன்படுத்தக்கூடிய இச் சலுகை ஆறு வெவ்வேறு மதிப்புகள் கொண்டது:

  • 100 யூரோக்கள் (1 நபர்);
  • 150 யூரோக்கள் (2 நபர்கள்);
  • 200 யூரோக்கள் (3 நபர்கள்);
  • 250 யூரோக்கள் (4 நபர்கள்);
  • 300 யூரோக்கள் (5 பேருக்கு);
  • 400 யூரோக்கள் (ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்).

Reggio Emilia நகராட்சியின் வலைத்தளமான www.comune.re.it/buonospesacoronavirus இணையதளத்தில் உள்ள படிவத்தை SPID குறியீடு மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

உணவுப் பொதிகள் (Pacchi alimentari)

உணவு ஒற்றுமை நிதியத்தின் ஒரு பகுதியாக, Reggio Emilia நகராட்சியானது உணவுப் பொதிகளை வழங்குகிறது. Reggio Emiliaவில் குடியிருப்பு பதிவு அற்ற குடும்பங்கள், உடல்நலம் அல்லது வேலை காரணங்களுக்காக தங்கள் குடியிருப்புக்கு திரும்ப முடியாமல், சிக்கலான பொருளாதார நிலைமைகளில் உள்ளவர்கள் உணவுப் பொதியைக் கோரலாம். Bonus spesaவிற்கு விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையை அணுக திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 0522 585472 ஐ அழைப்பதன் மூலம் அல்லது rendezvousisportellosociale@comune.re.it முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் சமூக சேவை துருவங்களை தொடர்பு கொண்டு நியமனம் செய்ய வேண்டும்.

உங்கள் கவனத்திற்கு