இத்தாலி ஜெனோவா நகரில் தமிழினத்திற்கு ஒளி கொடுக்க தன்னை உருக்கிய தியாக தீபத்தின் 39வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு .
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 39வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு (26/09/2026) சனிக்கிழமை 15:30மணிக்கு தமிழர் இல்லத்தில் ஈழத்தமிழர் ஒன்றிணைந்து சுடர்வணக்கம் மலர்வணக்கத்துடன் நினைவுகூரப்பட்டது. இவ்வெழுச்சி நாளில் மாணவர்கள், ஆசிரியர்கள் தியாக தீபத்தின் தியாகமைந்தனை நினைந்து கவிதை,பேச்சின் மூலம் மீண்டும் நினைவுகூர்ந்து ஈழத்தமிழர்களின் உரிமையையும் பார்த்தீபன் கனவையும் எடுத்துரைத்து வணங்கினார்கள். இவ் வணக்கநிகழ்வின் சில பதிவுகள்……













