இத்தாலி பலெர்மோ நகரில் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை.

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 39ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு, எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளான திலீபன் தமிழ்ச்சோலை மற்றும் ஏனைய சிறுவர்களுக்கு இலவசக் கண் பரிசோதனை முகாம் பலெர்மோ திலீபன் தமிழ்ச்சோலையில் 26.09.2026, சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இப் பரிசோதனையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினருடன் “அம்மீரா” (Ammyra) தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் இணைந்து, தியாகதீபம் திலீபன் அவர்களை நெஞ்சிலே சுமந்து, அவர்களுக்கான ஈகச் சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு, பிரபல கண் வைத்திய நிபுணர்களினால் கண் பரிசோதனை செய்யப்பட்டது.இந்நிகழ்வானது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கவனத்திற்கு