இத்தாலி ஜெனோவா நகரில் நடைபெற்ற மாவீரர்களின்உறவுகள்,உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு


எமது போராட்டத்தின் வலிமை போராளிகளின் நெஞ்சுரத்தில் பிறக்கின்றது என தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைத் துளிகளை நெஞ்சில் நிறுத்தி
மாவீரர் வாரமான (22/11/2026) ஞாயிற்றுக்கிழமை தமிழர் இல்லத்தில் பி.ப 14:30மணிக்கு ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் இசைக்குழு வாத்தியத்துடன் மாவீரர்களின் உறவுகள், உரித்துடையோர்களை மகளிர் அமைப்பினர்,
இளையோர் அமைப்பினர், ஜெனோவா செயற்பாட்டாளர்கள்,பொதுமக்களுடன் வரவேற்று மாவீரர்களின் திருவுருவப்படங்களிற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம், மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து ஜெனோவா மகளிர் அமைப்பு பொறுப்பாளரால் மதிப்பளிப்பு நிகழ்வு சிறப்புரையுடன் தொகுத்து வழங்கப்பட்டது. அத்துடன் மாவீரர் உறவுகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டதோடு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவேறின .

உங்கள் கவனத்திற்கு