ரெச்சியோ எமிலியா மாநிலத்தில் நடைபெற்ற வான்படை கடற்படை கண்ட உலகின் முதல் போராட்ட இயக்கத்தின் “மண்டியிடா வீரமும் வீறுகொண்ட எழுச்சியும்” 50 ஆவது அகவை பொன்விழா.
தமிழீழ விடுதலைப் புலிகளினதும், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அகவை 50 தும் பெரும் எழுச்சி நிகழ்வாக 04/10/2026 ஞாயிற்றுக் கிழமை அன்று மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
இத்தாலிக் கிளையும் அதன் உப கட்டமைப்புகளும், இத்தாலி வாழ் எம் உறவுகளும் இணைந்து எமது உரிமைக்கான பயணத்தின் 50 வது அகவையை மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடினார்கள்.
இந்த நிகழ்வானது கொடி வணக்கத்துடன் எம் தேசியத் தலைவரின் நிழற்படம் தாங்கியபடி எமது வரலாற்றுக் கட்டமைப்புகளின் சாட்சியங்களையும் தாங்கிய வண்ணம் “புலிகளின் தாகம் தமிழீழம் …. என்ற தாரக ஒலியுடன் அழைத்து வரப்பட்டு பொதுச்சுடர் ஏற்றலுடன் தொடங்கி, தேசியக் கொடி ஏற்றப்பட்டு, ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. தமிழரது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் உயிர் மூச்சாகவும், அரசியல் மற்றும் போரியல் சக்தியாகவும் திகழ்ந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள், காட்சிகள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் காட்சிப்படுத்தலுடன், தமிழீழ விடுதலைப்புலிகளின் தோற்றமும் அதன் பரிணாம வளர்ச்சியும் சார்ந்த விபரணத்தொகுப்பும் வெண்திரையில் காண்பிக்கப்பட்டது.
இவ்வெழுச்சி நிகழ்வு சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற்ற வேளையில் அதன் அதியுச்ச நிரலான ஆவணக் காட்சிப்படுத்தல் மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டது. தமிழர்களின அடங்காத கர்வமான அகவை 50 ஆவது நாளில் இளையோர்கள் தம்மை இணைத்துச் செயற்பட்டமை, எமக்கு எதிர்காலத்தில் நம்பிக்கையைத் தருவதாகவும் அமைந்திருந்தது. தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் கூற்றுப்படி, “போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம் போராட்ட இலட்சியம் மாறாது “என்ற அவரது சிந்தனை வெற்றி அளித்ததை இந்நிகழ்வில் காணக்கூடியதாக இருந்தது.
50 ஆண்டுகளாக எமக்காகக் களமாடியவர்களையும், அக்காலத்தில் வீரமறவர்களானவர்களையும் மனதில் இருத்தி, எமது மண்ணை மீட்டு, எமது மக்களினதும் எமது வருங்கால சந்ததியினதும் வாழ்வை நிலைப்படுத்தவும், உலகின் தலைசிறந்த இன மக்களாக எமது சொந்த இன அடையாளத்துடன் எமது சந்ததி வளரவும், நாம் தொடர்ந்து போராடுவோம் என இந்த 50ஆவது ஆண்டில் உறுதி எடுத்து , நிகழ்வின் இறுதியாக தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலுடன் நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.







































▶️






















