2ஆம் லெப்.மாலதி அவர்களின் 39ஆவது ஆண்டு வீரவணக்க நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும்- 2026

ஈழத்தமிழ்ப் பெண்ணினத்தின் அடையாளமாகவும்வீரப்பெண்ணாகவும் தமிழீழப் பெண்ணினத்தின் விடுதலைக்கு வழிகாட்டியாகவும் சரித்திரம் படைத்த 2ம் லெப்.மாலதி அவர்களின் 39 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு இத்தாலி ஜெனோவா மாநகரில் தமிழர் இல்லத்தில் (11/10/2026) ஞாயிற்றுக்கிழமை 10:30 மணிக்கு மகளிர் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் அனைத்து ஈழத்தமிழர்களும் ஒன்றிணைந்து உணர்ச்சி பூர்வமாக நினைவு கூரப்பட்டது. இந் நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, தமிழீழத் தேசிய கீதத்துடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.அதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றலுடன் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவித்து மலர்வணக்கம் சுடர்வணக்கம் போன்றன நடைபெற்றது.

தொடர்ந்து *2ம் லெப்.மாலதி அவர்களின்* வரலாறு சார்ந்த சிறப்புரைகளும் எழுச்சிப்பாடல்கள், கவிதை,பேச்சு, திலீபன் கலைக்கூட மாணவர்களின் நடனம்,ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் நடனம், சரித்திரம் படைத்த பெண் போராளிகள் நாடகம் என பல நிகழ்வுகளுடன் ஈழத்தமிழர்கள் எழுச்சிகரமாக உணர்வெழுச்சியுடன் நினைவு வணக்கம் செய்தார்கள். தமிழீழத் தேசியக் கொடி கையேந்தலைத் தொடர்ந்து “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடல் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தமிழரின் தாரகமந்திரத்துடன் வீரவணக்க நிகழ்வு நிறைவு பெற்றது.

உங்கள் கவனத்திற்கு