Covid-19 கண்காணிப்பு: எந்தப் பிராந்தியத்திலும் Rt 1க்கு மேலாக இல்லை
SarsCoV-2 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு, இத்தாலி முழுவதும் தொற்று விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. உயர் சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடுகளில் அனைவரும் அறிந்த R0ஐத் தவிர Rt எனும் ஒரு புதிய குறிகாட்டி காணப்படுகின்றது.
R0 மற்றும் Rtக்கும் இடையிலான வித்தியாசம் என்ன?
R0 எண் என்பது ஒரு தொற்றுநோயானது, அதன் ஆரம்பக் கட்டத்தில், பாதிக்கப்படக்கூடிய மக்கள் தொகையில் பரவும் தன்மையைக் குறிக்கிறது, Rt எண் என்பது நோயின் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைப் பயன்படுத்தியதற்குப் பிறகு தொற்று விகித்தை விவரிக்கிறது.
சுகாதார அமைச்சு மற்றும் உயர் சுகாதார நிறுவனம் 25 மே முதல் 31 மே வரை பதிவாகிய கட்டம் இரண்டின் குறிப்புகளின் அடிப்படையில் கண்காணிப்பின் முடிவை வெளியிட்டுள்ளனர்: கொரோனாவைரசு தொற்று வளைவின் நேர்மறையான போக்கு தொடர்கிறது. எந்தவொரு பிராந்தியத்திலும் Rt எண் 1ஐ விட அதிகமாக பதிவு செய்யப்படவில்லை.
“சரியான பாதையில் செல்கின்றோம் என கண்காணிப்புத் தரவுகள் கூறுகின்றன. ஆனால் இன்னும் எச்சரிக்கை தேவை” என சுகாதார அமைச்சர் Roberto Speranza கூறியுள்ளார்.
Lombardiaவில் Rt எண் மே 12 அன்று 0,53 ஆகவும், மே 26 அன்று 0,75 ஆகவும், ஜூன் 3 அன்று 0,91 வரை அதிகரித்துள்ளது. இது ஒரு நிலையான அதிகரிப்பாக இருந்தாலும், தொற்றுதல்களின் எண்ணிக்கை மிகச் சிறியதாக இருக்கும்போது, உள்ளூரில் ஏற்படும் சிறிய தீவிர நோய்ப் பரவல் காரணமாக தற்காலிக ஏற்ற இறக்கங்கள் 1க்கும் அதிகமாக இருக்கலாம், ஆனால் இது கவலைக்குரிய விடயம் அல்ல” என வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இத்தாலியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் SARSCoV-2 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த அனுமதித்தன ஆனால் சில பிராந்திய சூழ்நிலைகளில், ஒவ்வொரு வாரமும் பல புதிய தொற்றுதல்கள், குறைந்த அளவில் என்றாலும், ஏற்படுகின்றன. ஆகையால், நாட்டின் சில பகுதிகளில் SARS-CoV-2 பரவல் இன்னும் ஏற்படுவதால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பரவலின் அபாயத்தைக் குறைக்க, தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் உடல் ரீதியான பாதுகாப்பு இடைவெளி போன்ற நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது முக்கியம் என்று சுகாதார அமைச்சு வலியுறுத்துகிறது.
சுகாதார அமைச்சு மற்றும் உயர் சுகாதார நிறுவனத்திற்கு பிராந்தியங்கள் அனுப்பிய தரவுகளின் தரம் மற்றும் விவரங்களில் வலுவான முன்னேற்றம் உள்ளது. எனவே Covid-19 கண்காணிப்பு அறிக்கையின் படி இத்தாலியில் SARS-CoV2 நோய்த்தொற்றின் பரவுதல் மற்றும் தாக்கத்தின் அடிப்படையில், தொற்றுதல்களின் எண்ணிக்கையில் பொதுவான குறைவு மற்றும் மருத்துவ சேவைகளின் அதிக சுமைக்கான அறிகுறிகளும் இல்லாதது வெளியாகிறது.