அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு-2026 இத்தாலி
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்பட்ட தமிழ்மொழிப் பொதுத்தேர்வு-2026 சனிக்கிழமை (06.06.2026 ) இத்தாலி தமிழ்க் கல்விச் சேவையின் கீழ் இயங்கும் 9 திலீபன் தமிழ்ச்சோலைகளில் மிகச்சிறப்புடன் நடைபெற்றது.
இத்தேர்வில் முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 250க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றினர். தாய்மொழியைக் கற்று ஆர்வத்துடன் தேர்வு எழுதிய மாணவச் செல்வங்களை வாழ்த்துவதுடன் அவர்களை ஊக்குவித்து வழிநடத்தும் ஆசிரியர்களையும், பெற்றோரையும் போற்றுகிறோம்.
இத்தேர்வு நிறைவாக நடைபெற உழைத்த அனைவருக்கும் இத்தாலி தமிழ்க் கல்விச்சேவை தனது நன்றியைத் தெரிவிக்கிறது.
ஜெனோவா






பியல்லா







போலோனியா







ரெச்சியோ எமிலியா 05







மாந்தோவா







ரெச்சியோ எமிலியா 04







ரோம்



நாப்போலி






பலெர்மோ










