இத்தாலி ஜெனோவா நகரில் நடைபெற்ற “வட்டுக்கோட்டை தீர்மானமும் தமிழீழ ஆணையும்” அகவை 50பொன்விழா நிகழ்வு.

தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக உலகின் முன் உரைத்து நிற்கும் ‘வட்டுக்கோட்டை தீர்மானமும்,தமிழீழ ஆணையும் ‘ நிறைவேற்றப்பட்டதன் ஐம்பதாவது ஆண்டாகிய இவ் ஆண்டை ‘வட்டுக்கோட்டை தீர்மானத்தினதும்,தமிழீழ ஆணையினதும் பொன்விழா ஆண்டை வலுவூட்டல் ஆண்டாக பிரகடனம் செய்து நேற்றைய நாள் 07.06.2026 இத்தாலி ஜெனோவா மாநகரில் பல்லின மக்களின் கலாச்சார நிகழ்வு மண்டபத்தில் “அமைதிக்கான இசை” என்ற அமைப்பின் அனுசரணையில் தமிழ்த் தேசிய கட்டமைப்பின் வழிகாட்டலில் பிற்பகல் 15:00 மணிக்கு முதலில் கலைநிகழ்வுகள் ஆரம்பமாகி அதன் பின்பாக மண்டபத்திற்குள் சென்று அகவணக்கம் செலுத்தப்பட்டு அதன் பின்பாக கருத்தரங்கு வெகு சிறப்பாக நடைபெற்றது .

இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக்குழு,இத்தாலி தமிழர் ஒன்றியம்,இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை,இத்தாலி தமிழ் இளையோர் அமைப்பு,இத்தாலி மகளிர் அமைப்பு,இத்தாலி திலீபன் தமிழ்ச்சோலை ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன், இத்தாலிய மக்களும், ஈழத்தமிழ் மக்களும் கலந்துகொண்டிருந்த இக்கருத்தரங்கில் இத்தாலிய பாராளுமன்ற உறுப்பினரும் உலகில் ஒடுக்கப்படும் இனங்களுக்காக குரல் கொடுப்பவருமான மதிப்பிற்குரிய திரு.மார்க்கோ கிரீமால்டி மற்றும் ஜெனோவா மாநகர சபையின் வெளிவிவகார பிரதிநிதி மதிப்பிற்குரிய திரு.சிமோ ஹமீட் ஆகிய இருவரும் விசேட பிரதிநிதிகளாக கலந்து கொண்டு எமது பொன்விழா நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.


தொடர்ந்து வட்டுக்கோட்டைத் தீர்மானமமும்,தமிழீழ ஆணை தொடர்பான விளக்கங்களும்,ஈழத்தமிழ் மக்களின் வரலாறு, அத்துடன் விடுதலைப்போராட்டத்தின் நியாயத்தன்மை,சிறீ லங்கா இனவாத அரசுகளின் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு,எமது தேசியத் தலைமையின் நிகழ் அரசு,இறுதியாக முள்ளிவாய்க்காலில் 146,679 காணாமல் ஆக்கப்பட்டோர்,இப்பவரை இனவழிப்பு, தொடர்பான விளக்கங்களை தமிழ் இளையோர்கள் திறம்பட எடுத்துரைத்தனர்.
இளையோரின் வரலாற்று விளக்கங்களை உள்வாங்கிய இத்தாலிய பாராளுமன்ற உறுப்பினர்.மதிட்பிற்குரிய திரு. மார்க்கோ கிரிமால்டி தமது கருத்தை தெரிவிக்கையில் தற்பொழுது உலகில் முன்னின்று இனவழிப்பை நடத்தும் நாடுகளே தமிழ் இனத்தை இனவழிப்பு செய்வதற்கும் தொழினுட்ப மற்றும் ஆயுத உதவி வழங்கியவர்கள் என்றும்,தான் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலேயே (2008,2009) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிர ஆயுத ஆர்வலர்கள் என்றும், ஓர் இனத்தின் மக்கள் விடுதலை அமைப்பாக தங்களுக்கு ஊட்ட ப்படவில்லையென்றும் 2010 ற்கு பின்பாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பாக தனக்கு தெளிவு ஏற்பட்டது என்றும்,இந்த நிகழ்விற்கு பின்னால் தனக்கு இன்னமும் நம்பிக்கைக்குரிய தெளிவு ஏற்பட்டுள்ளதாகவும்,ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பென்று அறிவித்தது தவறு என்றும்,ஓர் தேசிய இனத்தின் அடையாளம்,மொழி,கலாச்சாரம் இருக்கும் வரை அவ் இனத்தை அழிக்க முடியாது என்று கூறி தனது கருத்தை நிறைவு செய்து எமது அடையாளமான தமிழீழ தேசியக் கொடியை தனக்குத் தருமாறு எம்மிடம் கேட்டு பெற்றுக்கொண்டார்.


அதனைத்தொடர்ந்து ஜெனோவா மாநகரசபையின் வெளிவிவகார பிரதிநிதி மதிட்பிற்குரிய திரு.சிமோ ஹமீட் தனதுரையில் எமது வரலாற்று குறிப்புகளை தெளிவாக குறிப்பெடுத்து தனது உரையை ஆரம்பித்தார் ,அத்தோடு எமது இரண்டாம்,மூன்றாம் தலைமுறையினர் இங்கு தமது இனத்தின் வலிகளையும்,வராலாற்ரையும் எடுத்து கூறுவது மகிழ்ச்சி என்றும் இதன் பெரும் பொறுப்பு அவர்களை வளர்த்தவர்களுக்கே சேரும் அத்தோடு இளையோர்கள் நிச்சயமாக விடுதலைப்போராட்டத்தை தெளிவாக முன்நகர்த்த வேண்டும் என்று ஊக்குவித்தார்.

நிறைவாக இலங்கைத் தீவில் நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு தனித் தமிழீழமாக தமிழர்கள் மீழ்வது ஒன்றே நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதை அறுதியிட்டு உறுதிமொழி எடுத்து நம்புங்கள் தமிழீழம் நாளை மலரும் பாடல் நிறைவுற எமது தாரக மந்திரமான “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” முழக்கமிட்டு நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
நன்றி.

உங்கள் கவனத்திற்கு