இத்தாலி போலோனியா நகரத்தில் நடைபெற்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபனுடைய 39 ஆவது நினைவு வணக்க நிகழ்வு.
தமிழ் மக்களின் வாழ்வுக்காய் இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். நல்லூர் முன்றலில் நீராகாரம் அருந்தாமல் அகிம்சை வழியில் 26.09.1987 அன்று 12ம் நாள் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது போலோனியா மாநகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27/09/2026) போலோனியா திலீபன் தமிழ்ச்சோலைப் பள்ளியில் திலீபன் அவர்களின் கனவைச் சுமந்து, அக்கனவை நினைவாக்க உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது.






























