ஈழத்தமிழர்களின் குரலாய் இத்தாலி றோம் பாராளுமன்றத்தில் செல்வி.சுதாகரன் அபிநயா

இத்தாலிப் பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர்களின் குரலாய் ஒலிக்கும் செல்வி.சுதாகரன் அபிநயா! ஜெனோவா மாநகரில் அமைந்துள்ள ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையில் சின்னஞ் சிறு மழலையாய் பிஞ்சு விரல் பிடித்து மழலையர்நிலையில் ஆதி மொழியாம் தமிழ்மொழியின் அகரம் எழுதி கல்வியைக் கற்க ஆரம்பித்து படிப்படியாக வகுப்பு நிலையில் தேர்ச்சி பெற்று பரிணாம வளர்ச்சியுடன் 12 ம் ஆண்டு கற்று முடித்து ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையால் மதிப்பளிக்கப்பட்டு சிறந்த மாணவியாகத் திகழ்ந்து, கல்வியை கற்பித்த ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் கற்ற பாடசாலையிலே ஆசிரியைப் பணியோடு தமிழர் தாயகத்தில் அழிக்கப்பட்ட எமது மக்களுக்கான நீதி கோரும் பணியையும் மேற்கொண்டுள்ள, செல்வி. அபிநயாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டு இத்தாலி மண்ணில் பிறந்து வளர்ந்து எதிலும் சளைக்காத நல்மகளாய் வாழிடநாட்டு மொழியையும் நன்றே கற்று கணக்கியல் துறையில் 2ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தை பூர்த்தி செய்த நிலையில் இன்று (26/06/2026) வெள்ளிக்கிழமை றோம் பாராளுமன்றத்தில் செல்வி அபிநயாவின் குரல் ஒலித்தது.

இத்தாலி நாட்டில் வாழ்கின்ற வெளிநாட்டவர்களின் நலன் சார்ந்த அரசியல் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காக உருவாகிவரும் அரசியல் பிரதிநிதிகளுடனான சந்திப்பு நடைபெற்றது. ஒவ்வொரு நாட்டிலும் இங்கு பிறந்து வளர்ந்துவரும் அடுத்த தலைமுறையினருக்கு எப்படி அனைத்து விடயங்களையும் முன்னெடுத்தல் என்றும், எவ்வாறு தாயகத்துடனான அரசியலை ஒன்றிணைத்து எடுத்துச் செல்லுதல் போன்ற ஆக்கபூர்வமாக விடயங்கள் நடைபெற்றன .

அத்துடன் ஜெனோவா பிரதேசத்தில் *பரிணாம வளர்ச்சியாக 31 ஆண்டுகளைத் தொட்டு நிற்கும் தமிழ் Comunità லிகூறியா தமிழ்ச்சங்கம் சார்பாக இத்தாலிப் பாராளுமன்றத்தில் செல்வி. சுதாகரன் அபிநாயா பங்குபற்றினார் என்பதை நெகிழ்வுடன் கூறுவதுடன் வளர்ந்து வரும் இளம் தலைமுறைக்கு மீண்டும் வாழ்த்துகளைக் கூறுவதில் பெருமையுடன் உவகை கொள்கின்றோம்.

லிகூறியா தமிழ்ச்சங்கம்

உங்கள் கவனத்திற்கு