இத்தாலி பியல்லா வல்திலான நகரில் தாயகநலன் திட்டத்திற்காக நடைபெற்ற இராப்போசன விருந்து.
13/06/2026 இரவு 8 மணிக்கு பியல்லா வல்திலான நகரத்தில் தாயக நலன் திட்டத்திற்கு உதவும் நோக்கோடு இத்தாலி மக்களுக்கான இராப்போசன விருந்து நடாத்தப்பட்டது. இந்நிகழ்வானது 2019 ஆண்டில் இருந்து கொறோணா காலப்பகுதி தவிர தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் உதவித்திட்டங்கள் காணோளி வடிவில் இந்நிகழ்வில் காண்பிக்கப்பட்டதோடு எமது இன அழிப்பிற்கான நீதி கோரல் விடயமும் இத்தாலி மக்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இந்த ஆண்டும் பியல்லாவாழ் தமிழ்மக்களின் பேராதரவுடன் இந்நிகழ்வு சிறப்பாக நிறைவேறியது.






















